பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. முழுமை பெற்ற கல்வி "படிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும். எனவே தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளக்கும் உயர் நிஜலப் பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்க வேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும் கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது, வளரும் பருவத்தினர். ஏற்ற கைத்தொழில் களில், செயல் திட்டங்களில் முறையாக ஈடுபடவும் வாய்ப் பளிக்க வேண்டும். -அங்கும் இங்கும் 49. முறையான கல்வி 'கையும் காலும், கண்ணும் காதும், வேலை செய்வு தற்கு வாய்ப்பு, சிந்தனைக்கு இடம்; தான்ே அறிய வாய்ப்பு; தன்னடக்கத்திற்கு இடம்; வகுத்துத் தொகுத்துப் பார்க்கும் உரிமை. இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கற்கும் கல்வி யன்ருே முறையான கல்வி?” -எண்ண அலைகள் 50. மூன்றும் வேண்டும் 'அறிவு: ஒழுங்கு! உறுதி! வாழ மூன்றும் தேவை." -தம்பி! கில் 51. மூன்று வகையினர் 'நல்லவர்கள், கெட்டவர்க ள், இரண்டுங் கெட்டான் கள்-இம்மூன்று வகையினரும் உன்னிடம் வந்து சேருவார்கள். நல்லவர்களிடம் கண்ணுங் கருத் துமாயிரு. அவர்களைப் போற்றி வளர்க்க. பிந்தியவர்களுக்காக உன் காலத்தையும் எண்ணத்தையும் முயற்சியையும் வினுக்காதே. அவர்கள் கால வெள்ளத்தில் சிக்கிக் கரைந்து விடுவார்கள்." -வையம் வாழ்க 145 10