பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. யாரை நம் புவது? "தமிழர் தம் காவில் நிற்கவேண்டும். தமிழன் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ய யாரையோ நம்பியிருத்தல் நல்லதன்று. தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடைய தமிழர் பலர், பல துறைகளிலும் ஈடு பட்டுக் கற்றுத் தேர்ந்து, தமிழ்த் தாத்தாவைப் போல் நம்மி லும் நாலு மேதைகள் சிந்துவெளி நாகரிகத்தையும் எழுத் தையும் ஆராயும் வாய்ப்பும் சூழ்நிலையும் பெற்றிருந்தால், அமெரிக்கப் பேராசிரியரை நம்பிப் பிழைப்பதா, சோவியத் சார்பாளரை நம்பி வாழ்வதா என்ற அவலநிலை வராதே!' -உலகத் தமிழ் 53. வழி காட்டி "அன்ன தானம் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. ஆனல் பள்ளிக்கூட அன்னதானம் பண்டறியாதது; இக்காலத்தில் கண்டது. தமிழ் நாடே கண்ட வெற்றிபெற நடத்திக் காட்டியது.” -வையம் வாழ்க 54. வாய்ப்புக்களைப் பெருக்குங்கள் 'குறைந்த எண்கள் பெறுபவர்கள் முன்னேற ஊக்குங் கள். வாய்ப்புக்களைப் பெருக்குங்கள். கூடுதலாகக் கற்க உத வுங்கள். வகுப்புப் பாடங்களைக் கற்கமட்டுமல்ல உதவி. தங்க ளுக்கு விருப்பமான நூல்களை எடுத்துப் படிக்க உதவுங்கள். எப்படி? தொடக்கநிலைப் உள்ளிகளில்கூட, நல்ல ஏற்ற நூல் நிலையங்களை அமையுங்கள். வயதிற்கேற்ற நூல்களை வாங்கி வையுங்கள். பூட்டி வைக்கவா? ஆகாது. திறந்து வையுங்கள். தேடிஎடுக்கவிடுங்கள். விரும்பிப் படிக்கட்டும். படிப்பார்வம் வேரூன்றட்டும். -எண்ண அலைகள் 46