பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும், சிறிய நூலகங்களும் ஆய்வு உதவுப் பணிக்கு ஒர ளவு நூலகவியற் கல்வி உடையவர்களே நியமிக்கலாம். அதா வது குறுகிய கால நூலகவியற் கல்வியினை முடித்து அதற்குரிய சான்றிதழைப் பெற்றவரையே அப்பதவியில் அமர்த்த வேண் டும். பலருக்கும் அறிவுச் செல்வத்தினை வாரி வழங்க வேண்டி யவர், ஆய்வு உதவு நூலகர் ஆவார். எனவே அவர் குறையாத அறிவுடையவராக விளங்க வேண்டும். அக்குறையாத அறி வினே அவர் எவ்வாறு பெறுவது? ஒயாது படிப்பதினல் அவர் பெற இயலும். மணற்கேணி ஒன்று உள்ளது. அதிலுள்ள மணலை நாம் பறிக்கப் பறிக்க நீர் சுரக்கும். மேலும் நாம் தோண்டிய அளவிற்கு ஏற்ருற் போல்தான் நீரும் சுரக்கும். அதுபோல நாம் நூல்களைப் படிக்கப் படிக்க தமது அறிவு வள ரும்; பெருகும்; வளம் பெறும். சால்புடைய நூல்களைப் படித்தலாலும், சான்ருேர் கருத்துக்களே அறிதலாலும் ஒரு வனுக்கு அறிவு பெருகி நிறைகின்றது. இதனை உலகப் பெரும் புலவர் வள்ளுவர், 'தொட்டனைத்துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனA துாறும் அறிவு” என்று சுட்டிக் காட்டியுள்ளார். எனவே ஆய்வு உதவு நூலகர் படிக்கின்ற பழக்கத்தை, என்றும் எதிநிலையிலும் கைவிடா திருக்கவேண்டும். சுருங்கக் கூறின், அவர் தாளும் தொடர்ந்து நன்கு கற்று, கூரறிவினைப் பெற்றவராக விளங்கவேண்டும். அத்துடன் நூலகத்திலே இருக்கின்ற கற்றற்கு உரிய நூல்கள் அனேத்தையும் ஒய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் உற்சாகத் துடன் படித்து மகிழவேண்டும். அவ்வாறு படிப்பது அவரது உள்ளத்தை விளக்கி, உணர்வை ஒளி செய்து, அவரை உயரச் செய்யும். மேலும் அவர் அறிவு நலம் கலந்த இனிய மொழி களையும், விழுமிய செயல்களையும் உடையவராக விளங்கி மனித சமுதாயத்திற்கு நல்ல அறிவுரைகளை நாளும் நல்க முடியும். அதன் காரணமாக நூலகத்திற்கு வருகின்ற மக்கள் அனைவரும் அவரிடம் விரும்பிச் சென்று உதவிக்ள் பல பெற்று அவரைப் பலபடப் புகழ்ந்து பாராட்டுவர். அறிஞர்களும் அவரை மதித்துப் போற்றுவர். எனவே ஆய்வு உதவு நூலகர் 2