பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வாய்மைக்கே தம்மை ஈந்தார் காந்தியார் பெற்ற பயிற்சி, தனி மனிதர்களுக்காக வழக்காட. ஆனல் செய்ததோ வேறு. நடத்தியதோ இந்திய நாட்டின் உரிமை வழக்கை. தம் சொந்த நலன்களைச் சிறிதும் கருதாது, தம்மையும், தம் சிந்தனையையும், உழைப்பையும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ஈந்தார் காந்தியார். ஒன்றைக் குறைத்து மற்ருென்றை மிகுதிப் படுத்தி வழக்காடு வதற்குப் பதில் வாய்மைக்கே தம்மை ஈந்தார். காலமெல்லாம் ஈந்தார். அன்பிற்கு ஈந்தார். மக்கள் அனைவருக்கும் தம்மை ஈந்தார்." -அண்ணல் காந்தி மலரஞ்சலி 56. வாழ்க்கையில் வெற்றிபெற "ஆசிரியருக்குப் பணிவு, பெரியோருக்கு அடக்கம், முடிவிற்குக் கட்டுப்படுதல், புதியவர்களிடம் இன்முகம், எல்லோரிடமும் இன்சொல், பள்ளிச் சமுதாயத்தோடு ஒன்றிப் போதல், இவை ஒழுங்கின் அடையாளம். வாழ்க்கை யில் வெற்றி...பெற இவை தேவை. இவற்றின் விளைநிலம் தரமான பள்ளியாகும்.’’ -எண்ண அலைகள் 57. வாழையடி வாழையாக "சுறு சுறுப்பும், முன்யோசனையும், தன்னிறைவும், பொறுமையும், ஒழுங்கும், கூட்டுணர்ச்சியும் இருப்பதால் அல்லவா இவ்வளவு சிறிய மாறும்பு இனம், இத்தனைக் காலம் உயிர் வாழ முடிகிறது? சுறுசுறுப்பும், தொலை நோக்கும், குறிக்கோளும், பொறுமையும், ஒழுங்கும். கூட்டுணர்ச்சியும் இருந்தால்தான் நீயும் நானும் நம் இனமும் வாழையடி வாழையாக இருக்கமுடியும்.” -வையம் வாழ்க 58. விதை நெல் "பொது நலம் என்ற பெயராலே ஊரார் வீட்டுப் பிள்ளைகளை ஆழந்தெரியாத, வேகமான, குழியும் சுழியும் 147