பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைந்த அரசியல் ஆறுகளிலோ, சமுதாய மடுவுகளிலோ, பொருள் நெறி அருவிகளிலோ தள்ளி விடுவது பாதகம். முதிராத மாணவ மாணவிகள், இவற்றில் இறங்கி, அரசியல் இளர்ச்சிகளிலோ, சமூகச் சண்டைகளிலோ, பொருளாதாரப் போராட்டங்களிலோ ஈடுபடுவது அவர்களுக்கு ஆபத்து மட்டுமன்று. பெற்ருேருக்கும் இழப்பு. விதை நெற்களாகிய இவர்களைக் காப்பது எல்லோருக்கும் நல்லது. எதிர் காலத் திற்கும் நல்லது." -வையம் வாழ்க 59. வெற்றியே பெறுவர் பெரிய நிலைக்குவர யார் முயற்சி செய்தாலும் துணிச்சல் வரவேண்டும். ஆகவே போட்டிகள் பலவற்றிலும் கலந்து கொள்ளவேண்டும். தோற்று விடுவோமோ, வெற்றி பெருவிடின் ஊரார் கிண்டல் செய்வார்களோ, ஏளனம் செய்வார்களோ, என்று அச்சப்பட்டுக் கலந்து கொள்ளாமல் பின்னடைந்து போகிற மக்கள் என்றும் முன்னேற முடியாது. வெற்றியோ, தோல்வியோ, நமக்குக் கவலை இல்லை, முயற்சிக்குத்தான் பொறுப்பாளர். பலனுக்கு நாம் பொறுப் பாளர் அல்லர்’ என உழைக்கவேண்டும். போட்டியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற்ருலும் தோல்வியடைந்தாலும் அந்தப் பயிற்சி காரணமாகப் பின்னர் வெற்றியே பெறுவர்." -பூவும் கனியும் 60. வேற்றுமை எண்ணம் வேன் டாம் வே ண் டி ய வ ர் கள், வேண்டாதவர்கள் என்னும் வேற்றமை எண்ணத்திற்கு உமது நெஞ்சில் இடங் கோடுக் ார்ே. ஏன்? அவ்வெண்ணம் நாடு முழுவதிலும் நஞ்சைப் பரப்பி விடும்; வாழை டி. வாழையாகப் பரப்பிவிடும். அது பெருந் திங்கல்லவோ? தொடர் திங்கல்லவா? அதை நீக்குவது நம் கடமையல்லவா!' - -எண்ண அலகள் 148