பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பள்ளி நூலகம் 1. பள்ளி நூலகத்தின் இன்றியமையாமை ஒரிரு பாடநூல்களை மட்டும் படிக்கும் பழைய கல்வி முறை இன்று எத்தனையோ மாற்றங்களைப் பெற்றுள்ளது. இன்றையக் கல்வித்திட்டத்தின்படி பல பாடநூல்களைப் படிப்பதோடு மாணவர்கள் வேறு பல நூல்களைப் படித்து ஏராளமான செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக் கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். இன்றைய மாணவர்கள் அறிவுக்கூர்மையோடு புதிய செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்களாகவும் உள்ளனர். விரைந்து பல மாற்றங்களைப் பெற்றுவரும் இன்றைய உலகில் கண்மூடித் திறப்பதற்குள் நடக்கும் பல அற்புத நிகழ்ச்சி களைப் பற்றி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். நாளும் வளர்ந்தவரும் அறிவின் பல பகுப்புக்களைப் பற்றியும் மேன்மேலும் புதிய தகவல்களை அறிந்து கொள்ள அவர்கள் பெரிதும் விரும்புகிருர்கள். மேலும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக உலகம் மிகவும் சுருங்கிவிட்ட காணத்தினுல் உலகத்தைப்பற்றிய-உலக நாடுகளைப்பற்றிய-அறிவு இன்றியமையாதது ஆகின்றது. எனவே ஆசிரியர் தமது பாடத்தை மனங்கொள நடத்த வேண்டுமானுல், மாளுக்கர் தமது பாடத்தை ஆசிரியர் சொல்லித்தரும்பொழுது நன்கு புரிந்துகொண்டு மேலும் விளக்கம்பெற வேண்டும. ஒல் இருவரும் பாடநூல் அறிவோடு உலகியலறிவையும் பெறவேண்டும். பல பொருள்களின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் இயல்பினையும் நன்மை திமைகளையும் அவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். -* இதற்குக் தோன்ருத்துணையாக உறுதுணையாக விளங்குவது 149