பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளி நூலகமே ஆகும். ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்ததொரு நூலகம் இருப்பின் ஆசிரியரும் மாணவரும் பாடநூல்களையும் அவற்ருேடு தொடர்புடைய ஏனைய நூல் களையும் படிக்க முடியுமன் ருே ! தற்பொழுது நாம் வகுத்திருக்கும் உயர்நிலைப்பள்ளிக் கல்வி முறை மாணவர்கள் தங்களது தகுதிக்கேற்ற வாழ்க்கை முறையினைத் தாங்களாகவே தேர்ந்தெடுக்கவும் அவ்வாறு தேர்ந்தெடுத்ததனைச் செம்மையான வகையிலே செயற்படுத் தவும் அத்துடன் எது பற்றியும் சிறந்த ஆதாரங்களின் அடிப் படையிலே சிந்தித்து முடிவுசெய்யவும் வழிகாட்டுவதாக விளங்குகின்றது. என்பதை நாம் அறிவோம். இத்தகைய கல்விமுறை சிறந்த பயன்களை அளிக்க வேண்டுமெனின் மாண வர்களுக்குப் பரந்த அறிவும் சிறந்தபடிப்பும் தேவைப்படு கின்றன. இவை இரண்டினையும் மாணவர்கள் பெறவேண்டு மெனின் நல்லதொரு நூலகம் பள்ளிகோறும் இருக்க வேண்டும். சுருங்கக்கூறின் நூலகம் இல்லாத தற்காலத்தில் சிறந்த கல்விமுறை எதனையும் செயற்படுத்த முடியாது என்பது வெள்ளிடைமலையாகும். பா கடன் கூடிய ஒரு பண்பாடு என்றும் ஒளிபெற்று விளங்க வேண்டுமெனின் அந்தப் பண்பாட்டையுடைய மக்கள் சொந்தமாக எண்ணவும் எண்ணியதைத் தெளிவாக எடுத்துரைக்கவும் ஆற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய ஆற்றலை ஒரு நாட்டு மக்களுக்கு அளிக்க வல்லவை இலக்கிய உணர்வு, கலைச்சுவை, பண் பாட்டுள்ளம் ஆகியவையாம். இவற்றைப் பெற்றவர்களே ஒரு நாட்டின் நன்மக்கள் ஆவர். நமது நாட்டில் இன்று நடைபெறுகின்ற மக்களாட்சி மாண்புடன் விளங்கவேண்டு மெனில், குடியாட்சி சிறக்கக் கோலோச்ச வேண்டுமெனில், இத்தகைய மக்களே நம் நாடெங்கனும் நிரம்பியிருத்தல் வேண்டும். அத்தகைய அருமைமிக்க குடிமக்களைத் தோற்று விக்கும் நிலையமே உயர்நிலைப்பள்ளி. ஏனெனில் அதில் இன்று 150