பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் மாணவர்களே நாளை நாட்டை ஆளப்போகும் குடி மக்கள் ஆவர். மேலும் பெரும்பாலோர் உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்ததும் நேரடியாக வாழ்க்கையில் இறங்கிவிடுவர். அதல்ை அவர்களுக்கே முதலில் தரமான, சிறப்பான கல்வி கம்பிக்கவேண்டும், அத்தகைய கல்வியை மாணவர்கள் பெறு வதற்குப் பெருந்துணையாக விளங்குவது உயர்நிலைப்பள்ளி நூலகமே ஆகும். எனவே நூலகம் இல்லாத பள்ளி காலில் லாத முடவனைப் போன்றதாகும். அத்துடன் அது நாட் டிற்கு ஒரு அவமானச் சின்னமும் ஆகும். பள்ளி நூலகத்தின் நோக்கங்கள் (1) ஒய்வுநேரத்தை விகைக் கழியாது நல்ல முறையிற் பயன்படுத்த நூல்களைப் படிக்கத் துாண்டுதல். (2) படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே வளர்த் தல். (3) நூல்களையும் நூலகத்தையும் பயன்படுத்துவதம் கான திறமையை வளர்த்தல். (4) பயிற்சியின் மூலம் படிக்கும் ஆற்றலைப் பெருக்குதல், (5) நற்பண்புகளை வளர்க்கக்கூடிய நூல்களைத் தேர்ந் தெடுத்துப் படிப்பதற்கு வழி காட்டுதல். (6) நல்ல நூல்களைப் பாராட்டும் திறனை வளர்த்தல். (7) கிடைத்த நூல்களுட் படித்த செய்திகளை அல்லது தகவல்களைச் சுருக்கி உரைக்கவும் எழுதவும் அத் தகவல் களின் அடிப்படையில் பொதுக் கொள்கைகளை வகுக்கவும் முடிவுகளை எடுக்கவும் வசதிகளைப் பெருக்குதல். (8) நூல்களுட் படித்தறிந்த தகவல்களைக் கொண்டு ஒக்கலைத் துர்க்கவும் உய்த்துணர் முறையிற் சிந்திக்கவும் வசதி களை ஏற்படுத்துதல். (9) பொதுச்சொத்துக்களை மதித்தல், பெரியோர் களிடம் பணிவு, பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை வளர்த் துக் குழந்தைகளைச் சிறந்த குடிமக்களாக வளர்த்தல். 151