பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகா பள்ளி நூலகப் பணிகள் சிறக்க வேண்டுமெனின், பள்ளி நூலகத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் நல்லமுறையிற் பயன்படுத்த வேண்டுமெனின் அதற்கெனத் தனி அலுவலர் ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தது நூலகவியல் சான் றிதழ் பெற்ற ஒருவரின் பொறுப்பில் பள்ளிநூலகம் இயங்க வேண்டும். பெரிய உயர்நிலைப்பள்ளிகள்-போதிய நிதி வசதி இருக்குமானல்-நூலக வியலில் பட்டம் பெற்ற ஒருவரை நூலகராக நியமிக்கலாம். பி. டி, பட்டம் பெற்ற ஆசிரி 'ருக்கு அளிக்கும் ஊதியத்தை பட்டதாரி நூலகருக்கும் கொடுக்கலாம். இரண்டும் இயலாததாயின் பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர் ஒருவரை நூலகவியல் சான்றிதழ்ப் பயிற் சிக்கு அனுப்பிப் பயிற்சி முடிந்ததும் அவரைப் பள்ளிநூலக ராகவும் நியமிக்கலாம். அதற்கெனத் தனி ஊதியமும் அவருக்குக் கொடுக்க வேண்டும். மேலும் அரசாங்கமும் இதற்குக் கட்டாயமாக உதவவேண்டும். ஆனல் இன்று பள்ளி நூலகத்தில் பணியாற்றும் ஏவலாளரை, பள்ளிநூலக ராகக் குறிப்பிடுவது மிகவும் வருந்துதற்குரியதாகும். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஒருபெரிய பள்ளிருரல கத்தில் மூன்று அல்லது நான்கு தகுதி பெற்ற நூலகர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளி நூலகரின் தலையாய பணிகள் வருமாறு: (1) நூல்களையும் நூலகத்தையும் பயன்படுத்தும் வகையினே மாணவர்க்கு எடுத்துக்கூறல். 2. நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பொருள் வாரி யாகப் பிரித்துப் பொருட்குறியீடுகளை வழங்கி, அக் குறியீடு களுக்கு ஏற்ப நூல்களை நூல்தட்டுக்களில் அடுக்கிவைப் பதோடு நூலக நூற்பட்டியும் தயாரித்தல். 3. நூல்களைப் பாராட்டிச் சுவைக்கும் திறனை மாணவர் களிடையே வளர்த்தல். 152