பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வகுப்பறைகளுக்கும் தனிப்பட்டவருக்கும் நூல் வழங்கல். 5. பாடநூல்களைப் பாதுகாத்து உரியவர்களுக்கு வழங்கல். 6. பாடங் கற்பிப்பதற்கு உதவக்கூடிய படங்கள், புகைப் படங்கள், துண்டு வெளியீடுகள் ஆகியவற்றைச் சேகரித்துப் பேணுதல். 7. நாட்டுப்படங்கள், நில நூல், கட்செவிப்புலக் கருவி கள் முதலியவற்றைப் பேணிப் பயன்பெறச் செய்தல். 8. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொது நூலகங்களிடமிருந்து நூல்களைப் பெற்று வழங்கல். 9. மாணவர்களுக்கும் வகுப்பறை நூலகத்திற்கும் தகுதி வாய்ந்த நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர்களுக்கு உதவுதல். m 10. நூலகத்தில் உள்ள நூல்களைப்பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நூல்களைப்பற்றிய சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல். 11. சிறுவர்களுக்குக் கதை சொல்லுதல். 12. நூலக வகுப்புக்களே நடத்தல். 13. நூல்களைப் பழுதுபார்த்துப் பேணுதல். 14. ஆண்டறிக்கை தயாரித்தல். 15. தேவையான கணக்குகளையும் ஆட்சி ஏடுகளையும் வைத்திருத்தல். பயிற்சி பெற்ற நூலகரின் பொறுப்பில் பள்ளிநூலகம் இயங்குவதால் ஏற்படும் நன்மைகள் பலவாகும். அவற்றுள் ஒரு சிலவற்றைக் கீழே காணலாம். (1) நூல்கள் சிறந்த முறையில் பொருள்வாரியாக வகைப்படுத்தப்பட்டு நூல்தட்டுக்களில் அடுக்கி வைக்கப் 153