பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுவதால் நூல்களை மாணவர்களும் ஆசிரியர்களும் எளிதாகக் கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் நூலகநூற்பட்டி யும் நூல்களைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவுகிறது. வாசகர் களது நேரமும் சேமிக்கப்படுகிறது. (2) பலதுறைகளில் பலபொருட்களைப் பற்றிய சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. (3) நூல்கள் விரைவாகக் கிடைக்கின்றன. (4) குழந்தைகளுக்கான பருவ இதழ்கள் நல்ல முறை யில் பயன்படுகின்றன. (5) சிறந்த நூல்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செலவைச் சிக்கனப்படுத்த முடிகின்றது. (6) வேறுபட்ட சுவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகை நூல்கள் நூலகத்தில் இடம் பெறுகின்றன. (7) கலைக்களஞ்சியம், ஆண்டுத் தகவல் நூல், நிலஇயற் படங்கள் போன்ற ஆய்வுத்துணை நூல்களை நல்ல முறையில் பயன்படுத்த முடிகிறது. (8) எந்த நூலகத்தையும் சிறந்த பயனுள்ள வகையிற் பயன் படுத்திக்கொள்வதற்கு மாணவர்களுக்குரிய திறமை பள்ளி நூலகருக்கு விரிவான பொதுக் கல்வியும், நூலக வியலில் சிறப்புக் கல்வியும் அவசியம் இருக்கவேண்டும். பள்ளியின் எ ல் லா நடவடிக்கைகளிலும் இணைந்து செயலாற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இருசாராருக் கும் நூலகர் உதவி புரியவேண்டும். ஆகவே எல்லாத் துறை களிலும் அவர் ஒரளவு அறிவு பெற்றிருக்கவேண்டும். சுருங்கக் கூறின் விரிவான பொதுக் கல்வியும் அடிப்படை நூலகவியற் கல்வியும் பெற்ற நூலகத் தொழில் வல்லுநர் ஒருவரால்தான் மாணவர்கள் ஆசிரியர்கள் இருவரோடு நெருங்கி இணைந்து பணியாற்ற முடியும். 154