பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகர் அறிவாற்றல், இன்முகம், இன்சொல், பணி செய்கின்ற பண்பு, பொறையுடைமை, அடக்கமுடைமை, கற்பனை வளம், நினைவாற்றல், சொற்றிறன், நூல்களைப் பற்றிய தெளிந்த அறிவு, பிறரைக் கவருகின்ற தோற்றம், உடை, செயல், பிறரது தேவைகளை அறியும் ஆற்றல், அன்புடைமை ஆகியவற்றை எல்லாம் கொண்டிருக்க வேண்டும். அவையே சிறந்த நூலகருக்கு இருக்கவேண்டிய பண்பு நலன்களாம். மேலும் நூலகருக்கும் ஆசிரியர்களுக்கு மிடையே நல்லுணர்வும் நட்புணர்வும் நிலவவேண்டும், நூலகத்தைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் இருவரும் இணைந்து ஒரே குழுவினராகக் செயலாற்ற வேண்டும். நூல்களிடத்து மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்படும் வகையில் நூல்களை ஆசிரியர்களும் நூலகரும் அறிமுகப்படுத்த வேண்டும். சிறந்த நூல்களை நூலகர் தேர்ந் தெடுத்துக் கொடுத்தபின் ஆசிரியர்கள் அவற்றை வகுப்பறை யிற் படித்துக் காட்டலாம். இங்ங்னம் படித்துக் காட்டுவ தால் நூல்களின் மீது மாணவர்கள் அதிக ஆர்வம் கொள் வார்கள். கீழ் வகுப்புக்களில் ஆசிரியர்கள் சுவையான நூல் களைப் படித்துக் கூறுவதோடு, நூலிற்காணும் கவர்ச்சியான படங்களையும் காட்டி, நூல்களிற் சிறுவர்கள் நாட்டங் கொள்ளும்படிச் செய்யவேண்டும். மேலும் நூல்களை ஆக்க முறையில் பயன்படுத்தும் முறையினை அவர்களுக்கு இளமை யிலேயே கற்பிப்பது நல்லது. இறுதியாக நூலக வகுப்புக்களை ஒதுக்குவதிலும், மிகுதி நேர அலுவல்களை நிருணயிப்பதிலும் நூலகருக்கு ஆசிரியர்கள் உதவி புரியவேண்டும். இன்றைய நிலை நூலகம் என்று அழைக்கத்தக்க நிலையில் தற்காலத்தில் நமது நாட்டில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் நூலகம் இல்லை. இருக்கின்ற நூலகங்களில் அங்கங்கே வாங்கிய நூல்களும் தேவையற்ற நூல்களும்தான் நிறைந்துள்ளன. மேலும் பள்ளி நூலகத்தை ஒரு குறைந்த சம்பளக்காரரோ நூலகத்தினைக் கண்டாலே வெறுப்புக் கொள்ளும் ஆசிரியரோ மேற்பார்த் 155