பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தால் இத்தகைய நூலகத்தினுல் மாணவர்கள் பயன்பெறுதல் என்பது குதிரைக் கொம்பே. இந்த அவலநிலைக்குக் காரணம் நம்மிற் பெரும்பாலோர் நூலகத்தின் அருமையினை உணரா திருப்பதே ஆகும்." நாம் செய்ய வேண்டியது என்ன? பள்ளி நூலகம் அறிவின் கருவூலம்; ஒர் ஆய்வுக்கூடம். தற் காலத்தே உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் தரம் மிகக் குறைந்து விட்டது. அக் குறையை நிறைவாக்க வேண்டுமானல் மாணவர்களிடையே விரிந்த படிப்புணர்ச்சியையும் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தல்வேண்டும். அதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த நூலகம் ஏற்படுத்தவேண்டும். அத்துடன் நூலகமும் சிறந்த முறையிற் பணியாற்ற வேண்டும். நூலக மானது அமைதியின் இருப்பிடமாய், ஒழுங்கின் உறைவிட மாய்த் திகழவேண்டும். ஒழுங்கை நிலை நாட்டுவது நூலகரின் பொறுப்பு ஆல்ை இதற்கு ஆசிரியர்களும் உதவவேண்டும். உயர் வகுப்பு மாணவர்களுக்கு நூலகத்தில் அதிக உரிமையும் சலுகையும் கொடுக்கவேண்டும். குறும்புகள் செய்துகொண்டு நேரத்தை வீணடிக்கும் குழந்தைகளை வகுப்பறைக்கு அனுப்பி விடவேண்டும். அவர்களின் நடத்தையை வகுப்பாசிரியர் அல்லது தலைமையாசிரியர் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். நூலக வகுப்பின்போது ஒவ்வொரு மாணவனும் இன்னின்ன இடத்தில்தான் அமர வேண்டும் என்று நிருணயித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் ஒரு வகுப்பு மாணவர்கள் நூலகத்திற்குள் நுழையும்போது இடத்திற் காகச் சண்டை போட்டுக் குழப்பம் செய்யாமல் அவரவர்கள் இடத்தில் போய் அமைதியாக அமர்ந்து படிப்பார்கள். கூடிய வரை நூலக மேசை, நாற்காலிகள் குழந்தைகளுக்குப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருக்கவேண்டும். மேலும் இத் துறையில் நாம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளோம் என்பதை உணர்ந்து இத்துறை வல்லுநர்களின் உதவிகளைப் பெற்று நமது எதிர்காலச் செயல் திட்டங்களை வகுத்துக் 156