பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த நூல்களில் நுண்ணியதாய நுழைநது சென்று அவற்றில் காணும் அரிய பல பொருள்களைத் துருவி நோக்கி, பரந்து சிறந்து தெளிந்த அறிவு உடையவராக விளங்க வேண்டும். அத்துடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு வாரி வழங்குதற் பொருட்டு, தான் படித்த அரிய நூல்கள், அவற்றிலே காணும் உயரிய கருத்துக்கள் முதலியவற்றைப்பற்றி ஒரு சுவடியிலே குறித்து வைத்துக்கொள்ளுதல் சாலச் சிறந்தது ஆகும். இன்று ஒரு சில பெரிய நூலகர்களும்கூட படிக்கும் பழக்கத்தைக் கைக் கொள்ளாமலிருப்பது வருந்துதற்குரியதாகும். மேற்கூறிய வாறு பல நூல்களைக் கற்று உண்மை மதிநலம் உடையவர் களாக அவர்கள் விளங்காது, ஏனைய வழிகளால் தங்களைப் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். தன்னை உயர்ந்தவன், சிறந்தவன், மதிமான், மேலோன் என்று எல்லோரும் மதிக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணு வதில் தவறென்றுமில்லை. ஆனல் அதற்கேற்ற வண்ணம் அவன் தன்னைத் தகுதி உடையவளுக ஆக்கிக் கொள்ளவேண்டும். உண்மை அறிவினைப் பெற்று விளங்கவேண்டும். நூற்கண் நுனித்த நுண்ணுணர்வு இல்லாது நூலகர், காண்பவர் வியந்து நோக்கும்படி நன்ருக அழகு செய்து வைக்கப்பட்டதும், ஆளுல் உயிரில்லாததுமாகிய புனைபாவையைப் போன்றவர் ஆவார். இதனை வ ள் ளு வ ப் பெருத்தகை, "நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று” என்று கூறியுள்ளார். அதாவது, நுண்ணியதாய் மாட்சிமைப் பட்டுப் பல நூல்களிலுஞ் சென்று அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும், அழகும், சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலாகும் என்பது இத னது கருத்தாகும். முன்னர்க் கூறியவாறு, ஆய்வு நூலகர், நூலகத்திற்கு வருகின்ற பலதிறப்பட்ட அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக் கும், ஏனையோர்க்கும் வேண்டும் பொருள் பற்றிய மூலங்களை 3