பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வோமாக! ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த நூலகத்தை உருவாக்குவதற்கு இவ்வழிகளைப் பின் பற்றுவோமாக! நூலகத்தில் அழகாகவும் தூய்மையாகவும் அமைந்த அறிக்கைப் பலகைகள் இருக்கவேண்டும். செய்தி இதழ்களில், பருவ வெளியீடுகளில் வெளியாகும் நல்ல பெரிய படங்களை அறிக்கைப் பலகைகளில் மாணவர்கள் பார்வைக்காகத் தொங்க விடலாம். அவ்வாறே புதிய நூல்களின் உறைகளை யும் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நூல்காட்சி நிலை யடுக்கு ஒன்று இருக்கவேண்டும். இதில் புதிய நூல்களைச் சிறிது காலம் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும். உண்மை யான பொருள்களும் காகிதப்பொம்மைகளும் காட்சிக்கு மேலும் கவர்ச்சி ஊட்டும். உதாரணமாக, கிளிஞ்சல்கள் கடல் சிப்பிகள், பாறைக் கற்கள் முதலியவற்றையும் அத்துடன் அவை பற்றிய நூல்களையும் சேகரித்து வைத்தால் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்களன்ருே! நமது நாட்டில் பள்ளி நூலகங்களை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளே எடுப்பதற்கு இதுவே தக்கதருணமாகும். இந்த முக்கிய பணியை இனியும் தள்ளிப்போடக் கூடாது. பள்ளிநூலக அன்ருடப் பணிகள் நூல்கள் பயன்படுவதற்கே உள்ளன. எனவே பயனுள்ள நூல்களை வாங்க வேண்டியது ஒரு பள்ளி நூலகத்தின் தலையாய கடமையாகும். மேலும் அவ்வாறு வாங்கிய நூல் களை வாசகர்கள் பயன்படுத்துவதற்குரிய நிலையில் ஆக்க வேண்டும். ஒரு சில வாசகர்கள் நூல்களை வீட்டிற்கு எடுத்துக் சென்று படிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு அவ்வாய்ப் பினை வழங்க வேண்டியது நூலகத்தின் கடமைகளுள் ஒன்ருகும். மேலும் நூலகத்தில் இருக்கின்ற நூல்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை நாம் நன்கு பாதுகாக்கவேண்டும். இவையனைத்தும் சீராக நடைபெறுவதற்கு ஒரு பள்ளி நூலகத் தின் நூலகர் ஒரு சில அன்ருடப் பணிகளே மேற்கொள்ள வேண்டும். அப்பணிகள் வருமாறு:

  1. 57