பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) நூல் தேர்வு நூல் தேர்வு என்பது பள்ளி நூலகத்திற்கு வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுத்தலாகும். இன்று பல மொழிகளில் பல பொருள்கள் பற்றி உலகெங்கணும் அன்ருடம் ஆயிரக் கணக்கான நூல்களும் பருவ வெளியீடுகளும் நாளிதழ்களும் வெளியிடப்படுகின்றன. வெளிவரும் நூல்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இரா. மேலும் வெளிவரும் அத்தனை நூல்களையும் ஒரு நூலகம் வாங்கவேண்டும் என்பது மில்லை. அதற்குத் தேவைப்படும் நூல்களை மட்டிலும் வாங்கினல் போதும். நிதிநிலை, நூல்களின் தேவை, வாசகர்களின் விருப்பம், வழங்கும் மொழி, புதிய பதிப்பு, வாசகர்களின் அறிவு நிலை ஆகிய ஐந்தினையும் மனத்திற்கொண்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்படின் நூ ல க ம் தொடர்ந்து வளரும் இயல்பிற்குரிய ஓர் உயிரோவியமாக உயர்வு பெறும் என்பதில் ஐயமில்லை. மாணவர்கள் முழுவதும் படிக்க வேண்டிய அடிப்படைப் பாட நூல்கள், அடிப்படைப் பாடங்களின் அறிவை விரிவு படுத்துவதற்குரிய துணை நூ ல்கள், குறிப்பிட்ட தகவல்களை மாணவர்கள் தடையேதும் இன்றிப் பெறுவதற்குத் துணை செய்கின்ற கலைக் களஞ்சியம், அகராதி, ஆண்டுத்தகவல் நூல் முதலிய ஆய்வுத்துணை நூல்கள், மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பம், திறமை ஆகியவற்றிற்கு ஏற்பப் படிக்கக் கூடிய நூல்கள். தனி அறிக்கைகள் தயாரிக்கவும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதவும் பயன்படத் தக்க நூல்கள், பொழுது போக்கிற்கெனப் படிக்கத்தகுந்த நூல்கள் ஆகியன பள்ளி நூலகத்திற்குத் தேவைப்படும் அறிவுச் செல்வங்கள் ஆம். பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு அனு மதிக்கப்பட்டுள்ள நிதியினைப் பல பொருள்களுக்கும் பின் வருமாறு பங்கிட்டுக் கொள்ளுதல் சாலச் சிறந்தது ஆகும். வழங்கப்பட்ட நிதி மொத்தம் 100 எனின், தத்துவம், சமயம் ஆகியவற்றிற்கு 2 விழுக்காடும் சமூக இயலுக்கு 10 விழுக் 158