பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் அறிவியலுக்கு 10 விழுக்காடும் பயன்படும் கலைகளுக்கு 14 விழுக்காடும் நுண்கலைகளுக்கு 8 விழுக்காடும் மொழி யியலுக்கு 2 விழுக்காடும் இலக்கியத்திற்கு 10 விழுக்காடும் பிரயாண நூல்களுக்கு 6 விழுக்காடும் வரலாற்றிற்கு 8 விழுக் காடும் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு 10 விழுக்காடும் கதை நூல்களுக்கு 8 விழுக்காடும் பொது நூல்களுக்கு 8 விழுக்காடும் ஒதுக்குதல் வேண்டும். (2) நூல் வாங்கல் நூல் வாங்கல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களே நூல் விற்பனையாளர்களிடமிருந்தோ அன்றி வெளியீட்டாளர் களிடமிருந்தோ வாங்குதல் ஆகும். மொத்தமாக நூல்கள் வாங்குங்கால் குறைந்தது மூன்று நூல் விற்பனையாளர்களிட மிருந்து விலைப்புள்ளி விவரங்களை வாங்கி யார் மலிவாகக் கொடுக்க இருக்கின்ருரோ அவரை நிலையான நூல்விற்பனை யாளராக (Standing Vendor) நியமித்து, அவர் வழியாக நூல்களை வாங்குதல் நலம் பயப்பதாகும். நூல்களை உதிரியாக வாங்குங்கால் நூல் வெளியீட்டாளர்களிடமிருந்து நேரடி யாகவே வாங்கலாம். (3) நூலினைப் பயன்பெற ஆக்குதல்: நூல் விற்பனையாளர்கள் நூலகத்திற்கு அனுப்புகின்ற புதிய நூல்களைப் பின்வரும் முறைப்படி சரி பார்த்து ஒழுங்கு படுத்திய பின்னர் அவற்றை வாசகர்கள் பயன்படுத்துவதற்கு நூல் தட்டுக்களில் அடுக்கி வைக்கவேண்டும். (g) sofluri ș56 (Checking Off): புதிய நூல்கள் விற்பனையாளரிடமிருந்து வந்ததும் முதலில் அவை தாம் அனுப்பச்சொன்ன நூல்கள் தாமா என்பதைச் சரி பார்த்தல் நூலகத்தாரின் முதற்பணியாகும், நூல் விற்பனையாளருக்குத் தாம் அனுப்பிய ஆணை, நூல் விற்பனையாளர் அனுப்பியுள்ள விலைச் சீட்டு ஆகியவற்றின் துணையுடன் இப்பணியினைச் செய்யவேண்டும். 1.59