பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஆ) நூலின் புறவடிவத்தைச் sifl us fr55sð (Collation) : அடுத்து நூலின் வடிவாக்கம் சரியாக உள்ளதா என் பதைக் கவனிக்க வேண்டும். பக்கங்கள் சரியாக இருக்கின் றனவா, நூலிற் குறித்துள்ளபடி படங்கள், நாட்டுப் படங்கள், ஒளி நிழற் படங்கள் முதலி யன சரியாக இருக்கின்றனவா என்று நாம் பார்க்க வேண்டும். (இ) நூல்களின் புறவடிவத்தைச் சரி செய்தலும் பிறவும்: நூல்களின் பக்கங்கள் சரியாக இல்லையெனின், அவற்றைச் சரி செய்ய வேண்டும். ஒட்டிக் கொண்டிருக்கும் பக்கங்களை யும் புடைத்துக் கொண்டும் நீட்டிக்கொண்டும் இருக்கும் பக் கங்களையும் கூர்மையான கத்தியின் உதவியால் சரி செய்ய வேண்டும். அதன் பின் நூல்கள் நூலகத்தின் செல்வங்கள் என்பதைக் காட்டுவதற்காக வேண்டி நூலக முத்திரையினே நூல்களின் தலைப்புப் பக்கம், இறுதிப் பக்கம் போன்ற இடங் களிற் பதிக்க வேண்டும். அத்துடன், நூல்பை, நாள் சீட்டு, வட்டச் சீட்டு ஆகியவற்றை முறையே நூலின் முன் அட்டை யின் உட்புறம், அதற்கு எதிர்ப் புறம் இருக்கின்ற வெற்றுப் பக்கம், நூலின் முதுகு ஆகிய இடங்களில் ஒட்ட வேண்டும். இறுதியாக நூல் சீட்டினத் தயாரித்து அதனை நூல் பையில் வைக்கவேண்டும். (ஈ) நூல்களைப் பதிவு செய்தல் : அடுத்து நூலினை வரிசைப் பதிவு செய்து, அதற்கு வரிசைப் பதிவெண் ஆன வழங்க வேண்டும். இதற்கு முதலில் நூலடங் கல் என்னும் ஆட்சி ஏட்டில் நூலைப் பற்றிய பின்வரும் விவரங் களைக் குறிக்க வேண்டும். 1. நூல் வரிசைப் பதிவெண்: 2. நூலிற்கு வரிசைப் பதி வெண் வழங்கப்பட்ட நாள்; 3. நூலாசிரியர்; 4. நூலின் தலைப்பு, 5. வகைப் படுத்திய எண்; 6. பதிப்பாளர், பதிப்பித்த இடம், பதிப்பித்த ஆண்டு; 7. நூல் வாங்கிய இடம், நாள், விலைச் சீட்டின் எண்; 8. விலை. 160