பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(9) ஒரு பருவத்திற் குறைந்தது ஒரு நூற் கண்காட்சி நடத்தல். (10) நூலக ஆண்டறிக்கைக்குரிய புள்ளிவிவரங்களைத் தயாரித்தல். (11) நூலக ஆண்டறிக்கை தயாரித்தல். (12) நூலகம் ஆற்றுகின்ற பணிகளைப்பற்றி நூலகத்தில் இருக்கின்ற செல்வங்களைப்பற்றி விளம்பரம் செய்தல். (13) நூல்விவரத் தொகுதி, பருவவெளியீட்டுக் கட்டுரை விவரத் தொகுதி ஆகியவற்றைத் தயாரித்தல். (14) அரிய சுவையான சிறப்பான நூல்களைப் பற்றிப் பேசுதல், நூல்களை வாசித்துக் காட்டுதல், கதை சொல்லுதல், இசை, கலை நிகழ்ச்சிகளை அமைத்தல். (15.) நூலகத்தினை துப்புரவாகவும் அழகாகவும் கவர்ச்சி யாகவும் வைத்தல். (16) தேசிய, உலக, விழாக்களைக் கொண்டாடுதல். (17) அடிக்கடி நூலக அமைப்பியல், ஆட்சி பற்றிய அறிவுரைகளைப் பெறுவதற்காக வேண்டி, தலைமையாசிரியர், ஒரு சில அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்ட நூலகக் குழு ஒன்றினை அமைத்து அதன் செயலாளராகவும் பணி செய்தல். 3. நூலக வகுப்புக்கள் வகுப்புக் கால அட்டவணையில் நூலக வகுப்புக்களுக்கு இடம் தரவேண்டும். அவ்வாறு நூலக வகுப்புக்கள் கட்டாய மாக இருப்பின் மாணவர்கள் அனைவரும் நூலகத்திற்குத் தவருது சென்று நூலகத்தில் காணும் செல்வங்கள் அனைத் தையும் பயன் படுத்தித் தங்களது ஆற்றலினையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளமுடியும். மேலும் நூலகத்திற்குச் செல்லு கின்ற பழக்கத்தை வழக்கமாகக் கொள்வதோடு நூலக வுணர்வினையும் பெற்று நூலகத்தின் அருமை பெருமை களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும். 162