பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து, நூலக வகுப்புககளை மாணவர்கள் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்போம். ஆருவது வகுப்பில் படிக்கின்ற மாணவர்கள் பின்வருவன பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளுதற்பொருட்டு நூலக நூற்பட்டி பற்றிய பாடங்களைத் தயாரித்து நடித்தலாம். (1) ஒவ்வொரு நூலுக்கும் நூல் தட்டில் தனி இடம் உண்டு. (2) ஏன் நூல்களுக்குக் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன? (3) நூலக நூற்பட்டியலின் டியன்கள் என்ன? (4) ஒரு குறிப்பிட்ட நூலோ அன்றி ஒரு குறிப்பிட்ட ஆசிரியரது நூலோ ஒரு குறிப்பிட்ட பதிப்போ ஒரு குறிப் பிட்ட நூல்வரிசையைச் சார்ந்த ஒரு நூலோ நூலகத்தில் இருக்கின்றதா என்பதை அறிய நூலக நூற்பட்டி எவ்வாறு துணை செய்கின்றது? நூலக நூற்பட்டி பற்றிய பாடங்கள் ! பாடம் ஒன்று ! நூலிற்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொருட் குறியீடு, நூற்குறியீடு பற்றி விளக்குதல். பாடம் இரண்டு நூல்கள் எவ்வாறு குறியீடுகளுக்கு ஏற்ப நூல் தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட் டிருக்கின்றன என்பது பற்றியும், பொருட் குறியீடுகளுக்கு ஏற்ப அடுக்கி வைத்திருப்ப தால் ஏற்படும் நன்மைகள் யாவை என்பது பற்றியும் எடுத்துக் கூறுதல். அத்துடன் மாணவர்களேக் குறியீடுகளுக்கு ஏற்ப நூல் களே அடுக்கி வைக்கச் சொல்ல வேண்டும். பாடம் மூன்று ! நூலக நூற்பட்டியலில் தொகுத்து வைக்கப் பட்டிருக்கும் தலைமைப் பதிவு, ஆசிரியர் பதிவு, பொருட் பதிவு முதலிய பதிவுகள் பற்றிக் கூறல். 163