பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு : நாற் குறியீடுகளைக் கொடுத்து நூல்களைத் فri-iلا தேடிக் கொணரச் செய்தல். பாடம் ஐந்து : சில கேள்விகளைக் கொடுத்து அவற்றிற்குரிய விடைகளைச் சொல்லச் சொல்லுவதன் மூலமாக நூலக நூற்பட்டியலின் பயன்களை உணரச் செய்தல். ஏழாவது வகுப்பு : பாடம் ஒன்று : நூலின் பகுப்புக்களையும் அவை கொண்டிருக் கின்ற செய்திகளையும் மாணவர்களுக்குக் கூறின், அவர்கள் நூலைப்பற்றி நன்கு அறிந்து கொள்வதோடு அதனைத் திறமையாகப் பயன் படுத்தவும் முடியும். எனவே நூலின் பகுப் புக்களாகிய (பகுதிகள்) முதுகு, அட்டை, தலைப்புப்பக்கம், பொருளடக்கம், பதிப் புரிமைத் தேதி, பின் இணைப்பு முதலியன பற்றிக் கூறுதல். பாடம் இரண்டு : அகர வரிசைத் தொகுப்பு அட்டவணைகள் பற்றிக் கூறி அவற்றைப் பயன்படுத்தச் செய்தல். எட்டாம் வகுப்பு : கலைக்களஞ்சியங்கள் பற்றிக்கூறி, அவற்றைப் பயன்படுத்தச் செய்தல். ஒன்பதாவது வகுப்பு: அகராதி, ஆண்டுத் தகவல் நூல், கையேடு, நில நூல்மூலங்கள், வாழ்க்கை வரலாற்று மூலங் கள், நூல்விவரத் தொகுதிகள் போன்ற பிற ஆய்வுத்துணை நூல்களைப் பற்றிக் கூறுவதோடு அவற்றைப் பயன்படுத்துவதைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலையில்வினுக்களைத் கொடுத்து விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்தல். 164