பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது, பதினென்ருவது வகுப்புக்கள்: 1. செய்யுள் நூல், கதைநூல், உரைநடை நூல் ஆகிய வற்றை எவ்வாறு படித்துப் போற்ற வேண்டும் ? (2) நூல்களைப் படித்து எவ்வாறு குறிப்பெடுப்பது ? (3) கட்டுரைகளை எழுதுவதற்கு நூல்களை எவ்வாறு பயன் படுத்துவது ? (4) ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி எழுதுவதற்கு எந் தெந்த நூல்களைப் படிக்கவேண்டும்? (காட்டாக, 'அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்தோரும் அந் நாட்டுச் செல்வங்களை வெளிப்படுத்தியவரும்” என்னும் தலைப்பிற் கட்டுரை எழுத வேண்டுமெனின், கலைக்களஞ்சியங்கள், வாழ்க்கை வரலாற்று அகராதிகள், புதியவுலகைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித் தமை பற்றிய நூல்கள், உலக வரலாற்று நூல்கள், தனி வாழ்க்கை வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு நூல்கள், ஐரோப்பாவைப் பற்றிய வரலாற்று நூல்கள், அமெரிக்க வரலாறு பற்றிய நூல்கள் ஆகிய வற்றைப் படிக்கவேண்டும்). (5) நூல் விவரத் தொகுதியின் பயன் யாது, அதனை எவ்வாறு தொகுக்கவேண்டும் என்பன பற்றி எடுத்துக் கூறல். மேற்கூறியவற்றை எல்லாம் நூலக வகுப்புக் களிலே நூலகர் எடுத்துச் சொல்லுதல் வேண்டும். ஆசிரியர்களும் அவருக்கு உறுதுணையாக விளங்க வேண் டும். அவர்களும் சில நூலக வகுப்புக்களை எடுக்க லாம். மேலும் அவர்கள் மாணவர்கள் நூலகத்தி லுள்ள செல்வங்களைப் பயன்படுத்தித் தங்களது அறிவினைப் பெருக்கு தற்கும் புதுக்குதற்கும் அகலப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பாடத்திட்டத்தினை வகுத்து அதனைச் செயல் படுத்த வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யின், மாணவர்கள் அறிவுடையவர்களாகவும் செயற்றிறம் உடையவர்களாகவும் 165