பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்களே சிந்திக்கக்கூடிய ஆற்றல் உடையவர்களாகவும் கட்டுப்பாடுடையவர்களாகவும் வருங்காலத்தில் அறிவின் சிகரங்களாகவும் பண் பின் உறைவிடங்களாகவும் கடமை யுணர்வுடையவர்களாவும் கலைகளைப் போற்றுகின்றவர் களாகவும் தாய்நாட்டிற்கும் உலகத்திற்கும் அரிய தொண்டு கள் பலவற்றை ஆற்றுகின்றவர்களாகவும் விளங்குவார் களன்ருே ! 4. பள்ளி நூலகப் பணி சிறக்கட்டும்! தொகுத்துக் கூறின், ஒரு நல்ல பள்ளி நூலகமானது, பள்ளியிலுள்ள எல்லா மாணவர்களும் தேவையானபோது பயன்படுத்துவதற்குரிய சிறந்த நூல்களையும் சாதனங்களை யும் சேகரித்து வைக்கும் ஒருதலைமை நிலையமாகும். அது போதனையின் இதயமும் ஆகும், எனவே அதனது வளர்ச்சியில் அரசும் அன்புக் குழந்தைகளும் அருமைப் பெற்ருேர்களும் ஆர்வமும் அக்கறையும் காட்டி, அதற்குரிய ஆக்கப் பணி களில் ஈடுபடவேண்டும். பள்ளி நூல்கம் பயிற்சி பெற்ற நூலகரின் மேற் பார்வையில் இயங்குவதுதான் சாலச்சிறந்ததாகும். பள்ளி நூலகரை நூலகவியலில் சிறப்புப் பயிற்சியும் கல்வியும் பெற்ற ஓர் ஆசிரியராகவே கருதவேண்டும். நூலகத்தை இயக்கவும் நூலக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் தேவை யான தனி அறிவை அவர் பெற்றிருந்தாலும், பாடத்திட்டம், பள்ளியின் நோக்கம் பற்றி அவர் ஆழ்ந்த விரிந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும். ஆசிரியர்களின், மாணவர்களின் தன்மை, மனப்போக்குபற்றியும், நூல்கள், செய்தி இதழ்கள் இவற்றின் தன்மைகள் குறித்தும் அவர் ஒரளவு அறிந்திருக்க வேண்டும். அவரிடம் நகைச்சுவை யுணர்வும், உய்த்துணர் திறனும், பணிசெய்யும் பண்பும் அமைந்திருக்க வேண்டும். நூல்களை அழுக்குப்படாமல் அழகாக அடுக்கி வைப்பதைவிட பலதுறைகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் துரண்டு வதையே அவர் தம் கடமையாகக் கொள்ளவேண்டும். ió6