பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றுள்ள நமது நாட்டு நிதிநிலையில் எல்லா உயர் நிலைப்பள்ளிகளிலும் பட்டதாரி நூலகர்களை நியமிப்பது என்பது இயலாத காரியம். தொடக்கத்தில் நூலகவியலில் சான்றிதழ் பெற்றவர்களை நூலகர்களாக நியமிக்கலாம். அவர்களுக்கு ரூ. 150 - 10 . 250 என்ற ஊதிய விகிதத்தைக் கொடுக்கலாம். அதற்கு நமது அரசும் அவசியம் உதவ வேண்டும். வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் நற்பண்புகளும் பழக்கங்களும் படிக்கும் ஆர்வமும் குழந்தையிடம் குடிபுகுவது அதனது பள்ளி வாழ்க்கையில்தான் என்பதை நாம் ஒருபொழு தும் மறக்கக்கூடாது. நூல்களைப் படிப்பதிலும் நூல்களைப் பிறர் படிக்கக் கேட்பதிலும் எல்லாக் குழந்தைகளும் ஆர்வம் காட்டுவது பள்ளிப் பருவத்திலேதான் ஆகும். ஆனல் படிப் பது வகுப்பறை நியதியாக மட்டும் அமைந்து விடுமாயின் குழந்தையின் இயற்கையான நூலார்வம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடும். ஆகவே குழந்தைகள் படிப்பதற்கென ஒவ்வொரு பள்ளியிலும், நூலகமும், அவர்களுக்கு உதவ நூலகரும் இன்றியமையாத தேவைகளாகும். மாணவர் படிப்பதைத் திறமையாக வளர்க்கவும் அதில் அவர்கள் இன்பங்காணவும் இப்பள்ளி நூலகம் உதவும். இனிய சூழ் நிலையில் நிறைந்த வசதிகளோடு அமைந்த நல்லதொரு பள்ளி நூலகம் பாலர்களை நூல்களை நாடச் செய்வதில் பெரிதும் உதவும். சுருங்கச் சொன்னல் பள்ளியின் இதயமே, உயிர் நாடியே பள்ளி நூலகம் தான். ஒரு பொருளைப் பற்றித் தன் வகுப்பிற்கு மேல் நிலையிலுள்ள நூல்களைப் படித்தற்குரிய ஆர்வத்தைக் குழந்தையிடம் இந்நூலகம் துரண்டுகிறது. கலை, கைத்தொழில், விஞ்ஞானம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பயணம் ஆகிய பலதுறை நூல்களும், பொழுது போக்கு இலக் கியங்களும், ஆன்மீக உணர்வினைத் துரண்டும் அரிய நூல்களும், ஆய்வு உதவு நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெறுவதால் தம் பாடத் திட்டத்தில் சேராத இந்நூல்களை நூலகத்தில் குழந்தைகள் காணும்போது அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் ஊற்றெனப் பீறிட்டெழுகிறது. 167