பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். ஆர். இரங்களுதன் வகுத்துள்ள ஐந்து நூலகவியல் விதிகளுள் மூன்ருவது நூலுக்கு ஒர் ஆள்’’ என்பதாகும். படிக்கும் பழக்கம் இளமையிலேயே படிய வேண்டும்; வயது முதிர்ந்த பின் இந்தப் பழக்கத்தை ஏற் படுத்துவது கடினம் என்பது இவ்விதியின் உட்பொருளாகும். விளையும் பயிராயுள்ள குழந்தைப் பருவத்திலேயே, அதாவது பள்ளிப் பருவத்திலேயே படிக்கும் பழக்கம் குழந்தையிடம் குடி புகவேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகரைப் பெறும் உயர்ந்த குறிக்கோளை நாம் அடைய முடியும். பொதுவாக பள்ளி மாணவர்களுக்குக் கணிதம், விஞ்ஞானம் வகுப்புக்களைப் போல் நூலக வகுப்பும் ஒழுங்காக நடைபெற வேண்டும். அவர்கள் விரும்பும் நூல் களே வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அவர்களை அனுமதிக்க வேண்டும். முன்னர்க் கூறியபடி பள்ளிக்கால அட்டவணையி லேயே நூலக வகுப்பிற்கும் நேரம் ஒதுக்குதல் வேண்டும். இந்நேரக்தைப் பின்வரும் காரியங்களுக்குப் பயன் படுத்த வேண்டும். 1. நூல்களையும் நூலகத்தையும் எங்ங்னம் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதை மாணவர்களுக்கு நூலகர் மூலம் விளக்கிக் கூறுதல். 2. வகுப்பறை அலுவல்களை அதிகரித்தல். 3. பொழுது போக்குக்காகப் படித்தல். 4. வீட்டில் படிக்கவும், வகுப்புப் பாடங்களைக் கற்கவும் உதவும் நூல்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வாய்ப் பளித்தல். நூலக வகுப்புக்கள் தவிர, வேறு தனி நேரம் ஒதுக்கி, அந்நேரத்தில் மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து நூலகத்திற்கு அனுப்பி, பாடம் பற்றிய வேறு நூல்களைப் படிக்கவும், ஆய்வு நடத்தவும் பணிக்கலாம். ஆனல் கீழ் 168