பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு மாணவர்களை ஒரு குறிப்பிட்ட அளவே நூலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சொந்த முயற்சியில் படித்துப் பயன்பெறக் கூடிய உயர் வகுப்பு மாணவர்கள் நூலகத்தை அதிக நேரம் பயன் படுத்திக் கொள்ள வசதி செய்து கொடுக்கவேண்டும். கீழ்வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்களில் சில நூல் களைச் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இந்நூல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். எனினும் நூலகருடன் கலந்தாலோசித்து, அவ்வப்பொழுது மாணவர் களை நூலகத்திற்கு அழைத்துச் செல்லவும் வேண்டும். அல்லது அவர்களுக்குக் கதைகள் சொல்லவும் செய்யலாம். உயர் வகுப்புக்களிலும் வகுப்பறை நூல்கள் இருத்தல் நலம் பயப்பதொன்ருகும். இந்நூல்கள் பாடங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். வகுப்பறை நூல் களில் பொழுது போக்கு நூல்கள் பெருமளவில் இடம் பெறு வது நல்லதன்று. நூல்கள் எங்கிருந்தாலும் சரி, மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற நூல்களைத் தாங்களாகவே தேர்ந் தெடுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னர்க் குறிப்பிட்டபடி இளமையிலேயே நூலகம் செல்லும் பழக்கத்தைக் கொண்ட ஒருவர் தமது முதுமைக் காலம் வரை அப்பழக்கத்தைக் கைவிட மாட்டார். பள்ளிநூலகம் வகுப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே திறந்திருக்க வேண்டும். பள்ளி முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே மூடப்பட வேண்டும். இடை வேளை நேரத்திலும் அது திறந்திருக்க வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் நூலகம் திற்கு வர அனுமதிக்க வேண்டும். அறிவாற்றல் மிகுந்த மாணவர்களுக்குத் தனிவசதி செய்து கொடுக்க வேண்டும். 169