பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டியது ஆய்வு நூலகரின் தலையாய கடமை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அக்கடமையினை அவர் சரிவரச்செய்ய வேண்டுமெனின் அவர் நூல் உலகத்தைப் பற்றி தன்ருகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நூலகத்தில் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருக்கின்ற நூல்கள், அவ்வப்பொழுது வாங்குகின்ற புதிய நூல்கள் ஆகியவற்ற்ைப் பற்றிய விவரங் கனப் பொதுவாக அறிந்து வைத் திருப்பதோடு, அந்த நூல் களில் சிறந்த நூல்கள் எவை, அவற்றின் தரம் என்ன? அவை யாருக்குப் பயன்படும்? அவற்றின் குறிக்கோள் என்ன? அவற் றில் கூறப்பட்டிருக்கும் பொருட்சுருக்கம் யாது என்பன போன்றவற்றையும் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாற்ற ைஅவர் நாளடைவில் நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெரிதும் துணைசெய்வது நினைவாற்ற லாகும். எனவே ஆய்வு உதவு நூலகர் சிறந்த நினைவாற்றல் உடையவராக இலங்க வேண்டும். அத்துடன் நூல் விற்பனை யாளர், பதிப்பாளர் ஆகியோரால் அவ்வப்பொழுது வெளி யிடப் பெறுகின்ற நூல்விவரத் தொகுதிகள், நூற்பட்டிகள் பருவ வெளியீட்டு அகரவரிசை அட்டவணைகள், கட்டுரைப் பொருளடக்க அட்டவணைகள், பிற அகர வரிசைப் பொருள் அட்டவணைகள், பருவ வெளியீட்டுக் கட்டுரைப் பொருட் சுருக்க வெளியீடுகள், நூல் மதிப்புரைகள், அரிய சுவடிகளைப் பற்றிக் கூறும் பட்டிகள், நூல்களைப் பற்றிய செய்திகளைத் தரும் ஏனைய வெளியீடுகள் ஆகியவற்றை அவர் அவ்வப் பொழுது படித்து அவசியமெனின் குறிப்புக்களும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் தான் பணியாற்றுகின்ற நூலகத்தில் எந்தெந்த நூல்கள் எங்கெங்கு வைக்கப்பட் டுள்ளன என்பதையும், நூலக நூற்பட்டியின் தன்மையினேயும், அமைப்பினையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவ்வாறு அவர் தெரிந்து வைத்திருப்பின், வாசகர்களுக்குரிய நூல்களை உரிய நேரத்தில் கொடுத்துதவ முடியும். . இன்றைய உலகம் அறிவியல் உலகம். ஒவ்வொரு நாளும் உலகில் எத்தனையோ விந்தைகள் திகழ்கின்றன. புதுமைகன் 5