பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இலக்கியத் தொண்டர் - கலைஞர் இருபதாம் நூற்ருண்டுத் தமிழுக்கு வலிவும் பொலிவும் அளித்த ஏந்தல்களுள் தமிழக முதல்வர் தமிழவேள் டாக்டர் கலைஞர் மு. கருணநிதி அவர்கள் முன்னணியில் நிற்கும் முத்தமிழ்த் தொண்டர் எனின் மிகையன்று. கலைஞர் கருணநிதி, தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் நிதி; தன்னிகரில்லாத் தமிழார்வலர்; தமிழ்த் தொண்டாற்றுவதில் தலைமைச் சான்ருேர்; தமிழ்க் கவி படைத்திடும் புலமை நலத்தவர்; தமிழ் நாடகம் பல நலமுறத் தந்தவர்; தருபவர்; தமிழ்க் கதை புனேயும் கற்பனைத் திருவினர்; தமிழ்த் திரைப் படங்களில் புரட்சியைச் செய்தவர். தமிழ் மேடைகளில் தலைமை ஏற்பவர்; தமிழகப் பெருமையை மூச்செனக் கொண் டவர்; தமிழர் நலமே அமிழ்தெனப் போற்றும் செம்மல். அன்னர் கற்பனை நயம் செறிந்த கவிதைகளாலும், உணர் வைத் து.ாண்டும் உரைநடையாலும், எழுச்சியூட்டும் சொற்பொழிவாலும் முத்தமிழுக்கும் தொண்டாற்றும் மூத்தவர். அத்தானி மண்டபத்து அமர்ந்திருந்தாலும் அருந்தமிழை அவர் என்றும் மறப்பதில்லை. செங்கோல் ஏந்தியிருந்தாலும் அவர் சிந்தையில் செங்கோலோச்சுவது செந்தமிழே. அரசியல் அவரை ஆட்கொண்டிருந்தாலும் அவர் உள்ளத்தைத் தடுத்தாட் கொண்டிருப்பது தண்ணருந் தமிழே. பாவலர் போற்றும் பைந்தமிழ், அவர் அகவாழ் விலும் புறவாழ்விலும் நீக்கமற நிறைந்து அவரை ஏறு போல் பீடு நடை போடச் செய்கின்றது. மொழியோடு இனம் வாழ அவர் ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டுகள் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கன. கலைஞர் கருவிலேயே எழுத்தாளகை உருவாகி வந்த ஒர் இலக்கியப் படைப்பாளி. கலேயுணர்வு களுைருக்கு இயல்