பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக அமைந்த பேறு; அது அவர் கருவிலேயே பெற்ற திரு. அவருடைய கலையுள்ளத்திலிருந்து ஊற்றெனப் பெருக் கெடுக்கும் எண்ணங்களை யெல்லாம் இலக்கிய வடிவமாக்கு வதற்கு அவருடைய அரசியல் ஈடுபாடு காரணமாக அவரால் இயலுவதில்லை. எனினும், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பும், அதன் பின்பும் அவர் உள்ளத்தில் மலர்ந்த எண்ண மலர்களை எழுத்தில் வடித்து முக்கனிச் சுவையாய் முத்தமிழ் புகழ் பரப்பும் நூல்களாக ஆக்கித் தந்திருக்கிருர், இலக்கிய இயலின் எல்லாத் துறைகளும் கலைஞரின் கைவண்ணத்தில் கவின் பெற்றுள்ளன. கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், பயண இலக்கியம், கட்டுரை ஆகிய அனைத்தும் அவருக்குக் கைவந்த கலையாகும். கவிதை உள்ளத்தில் உண்மை ஒளி பெற்று, வாக்கினிலே ஒளி உண்டாகி, வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப் பெருக்கு மேவிய காரணத்தால், கலைஞர் அவர்கள் அழகுத் தமிழில் அரிய பல கவிதைகளைக் கற்பவர் மனம் களி நடமிடும் வகையில் படைத்துக் கொடுத்துள்ளார். கவிதையும் கலையும் சமுதாயத்தில் தோன்றி, மக்கள் உள்ளத்தை உயர்த்தி சுற்றுச் சூழலையும் செம்மைப்படுத்தி, ஒழுங்கையும் தூய்மை யினையும் உருவாக்குவன. கவிதை உள்ளங்கொண்ட கலைஞர் தாம் கருதிய கருத்திற்கு அழகூட்டி , இசை கூட்டி, கற்பனை நயங்காட்டி, காவியப் பண் பூட்டி, உயிரூட்டி, உணர்ச்சி யூட்டிக் கவிதைகளைப் புனைந்துள்ளார். உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து (பொருள்) என்னும் நான்கும் கவிதைக்கு இன்றியமையாதன என இலக்கியத் திறய்ைவாளர் கூறுவர். கலைஞரின் கவிதைகளில் உணர்ச்சி யும், கருத்தும் உயர்ந்தோங்கி விளங்குவதைக் காணலாம். இதனைக் கலைஞரே கூறுகின்ருர்:

உள்ள உணர்ச்சிகளை கல்ல தமிழ் வரிகளிலே பாடியிருக்கிறேன்; அவ்வளவுதான்! கவிதைக்

179