பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரிய கட்டுக்கோப்பு, இலக்கணம் இவைகளை கான் மீறி இருக்கிறேன் என்ருல் அது கவிதை இலக்கணத்தின்பால் கான்கொண்ட பற்றுக் குறைவு என்பதைவிட எடுத்துக் கொண்ட கருத்தின் பால் எனக்குள்ள ஆழ்ந்த அள் பினையே வெளிப்படுத்துவதாகும்.' இக் கருத்தினையே, -

தலையறுத்த வீரர்கதை பாடுவதால் தளையகற்றிப் பாடுகின்றேன் கானும்-அவர் தொடைதட்டித் துரோகிகளை வீழ்த்தியதால் தொடைதட்டும் என்பாட்டும்’ என்று கவிதையிலேயே மொழிகின்ருர் கலைஞர். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதுபோல்' என்பது தமிழ்ப் பழ மொழி. இதற்கு ஏதேதோ விளக்கங்களைக் கேட்டிருக்கிருேம். கலைஞர் இதற்குக் கூறும் விளக்கத்தைப் பாருங்கள் :

கிணறு வெட்டப் பூகம்புறப்பட்டது என்பாரே, அதன் பொருள்என்ன-புரிகிறதா? கிணறுவெட்ட மண் குவியும்-ஒருபூதம் (மண்) பூமிக்குள் அடைந்திருந்த காற்று வெளிக்கிளம்பும்-மறுபூதம் (காற்று) பொங்கிவரும் புதுநீரே அடுத்த பூதம் (நீர்) பொலிவுமிகு வான் தெரியும் நீர்மீது காலாம் பூதம் (விண்) புவியாளும் ஆதவனின் தீக்கதிரால் அக்கீரும் து.ாய்மையாகும் ஐந்தாம்பூதம் (தி) இந்தப் பஞ்சபூதம் வருவதைத்தான் பழையவர்கள் அழகாய்ச் சொன்னர் அறிவுப் பஞ்சைகளோ அலறுகின்ருர் பூதமென்று.” கலைஞர் ஒரு கருத்துக் கவிஞர்' என்பதற்குச் சான்று கூடி இது ஒன்றே போகாகா உள்ளத்து உணர்ச்சிகளைக் கவிதை "... 180