பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாகக் கொட்டிக் குவிக்கும் உணர்ச்சிக் கவிஞர் கலைஞர் என்பதற்குச் சென்னை வானெலியில் பேரறிஞர் அண்ணு அவர்களுக்கு, கலைஞர் அளித்த கண்ணிர்க் கவிதாஞ்சலி சிறந்த சான்று: கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன்சென்ருய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்ருய்; இதையும் தாங்க ஏதண்ன எமக்கிதயம் ? கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணு ! எழுந்துவா எம்மண்ணு ! வரமாட்டாய்; வரமாட்டாய் இயற்கையின் சதி எமக்குத்தெரியும் அண்ணு...மீ இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணு கான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால்மலரில் வைப்பேன் அண்ணு 1” என்னும் வரிகளில் காணும் உணர்ச்சி கல்நெஞ்சையும் கரைக் கும் தன்மையது. சுயமரியாதை இயக்கத்தின் துாண்களில் ஒருவராக விளங் கிய பன்னீர் செல்வம், வெளிநாடு சென்ற கால் கடலில் வீழ்ந்து இறந்த பொழுது, கண்ணிர்க் கடல் என்ற தலைப்பில் கலைஞர் வரைந்த சொற்சித்திரம் உள்ளத்தை உருக்குவ தாகும். இதோ! அக்கவிதை :

இருட்டறையில் இருகண்கள் மூடிக்கொண்டு

உருட்டுகின்ருர் உலகத்தார் என்று செல்வோர் அழுந்தட்டும் அறியாமை; அதையுணர்த்த முழங்கிற்று பெரியாரின் முரசஒலி 181