பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுவுண்ட மக்கள் எல்லாம் விழித்தெழுதல் இதுகண்டால்...நின் பணிக்குக் காணிக்கையாம்! சுற்றி எதிர்ப்புகள் சூருவளியாய்ச் சீறிடினும் வெற்றி எமக்கென்றே வெளிக்கிளம்பி விட்டோம்! பஞ்சை களல்ல நாங்கள்... தஞ்சைக் காவலன் சந்ததியார்! வீழ்ந்திட நேரிடினும் நின்செயல் பாடி வீழ்ந்திடுவோம்!” ö 6Ꮘ &5 g தமிழ் இலக்கியப் பூங்காவில் அதன் மரபுக்குப் புதிய வான பூவினங்கள்-இலக்கியங்கள்-சிறுகதையும், நாவலும் ஆகும். இவ்விரு மறுமலர்ச்சி இலக்கியங்களும் தமிழில் வளர்ந்து மலர்ந்து மணம் வீச வித்திட்ட முன்னேடிப் படைப் பாளிகளில் கலைஞருக்கு உறுதியாக முன்வரிசை இடம் ஒன்று உண்டு. மனித மனத்தின் ஆழமான உணர்ச்சிகளை, வாழ்வின் அடிப்படைப் போராட்டங்களை அடித் தளமாகக் கொண்டு, தக்க பாத்திரங்களின் துணையுடன் கலைஞர் எழுப்பிய புதின மாளிகைகளும், ஒப்பற்ற சிறு கதைகளும் கண்டு வியப்போர் கருத்திற் பதிந்த கனவாகி, கால இட மாறுதல்களிலும் கரைந்து போகாமல் நின்று நிலவும் கருத்துக் களஞ்சியங் களாக விளங்குகின்றன. புராணச் செய்திகளை, வரலாற்று உண்மைகளை, சமுதாயக் கீறல்களைத் தமக்கேயுரிய நாடக பாணியில் நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை அமைத்து விளக்கிக்காட்டி விடுவார் கலைஞர். "நளாயினி', 'சந்தனக் கிண்ணம்' என்னும் சிறுகதைத் தொகுதிகளில் இடம் பெற் றுள்ள சிறு கதைகள் அத்தனையும் இதற்குச் சான்று பகர்வன. 'புதையல்", "வெள்ளிக் கிழமை முதலிய நாவல்கள் கலை ஞரின் சிறந்த நாவல் இலக்கியப் படைப்புகளாகும், 183