பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம் 'நாடகக்கலை வெறும் பொழுது போக்குக் கலை மட்டும் அல்ல; மனித உணர்வுகள் பழுதுபடாமல், புழுதி படி யாமல் பொலிவு பெற்றிட உதவும் புதுமைக் கலையாகும். உறைந்துவிட்ட பனிக்கட்டி உள்ளங்களையும் உருக வைத்து, உலர்ந்து விட்ட உணர்ச்சிசளுக் கெல்லாம் பசுமையூட்டி, நனைந்துவிட்ட விறகுகளாகப் புகைந்தவாறே நகைச் சுவையை மறந்தவர்களையும் சிரிக்க வைத்துச் சிந்தையைக் கிளறி விடும் விந்தை கலையும் க் நாடகமே” எனக் கூறும் கலைஞர், மேடைகளிலே மேன்மையுற்றுச் சிறந்த அளவுக்கு நூல் வடிவிலே இலக்கியத் தகுதியோடு நாடகத் தமிழ் வளர்ந்திடவில்லை’ என ஏங்குகின்ருர். இந்த ஏக்கந்திர தமிழ் நாடகத்துறைக்குக் கலைஞர் படைத்தளித்த வெற்றி நாட கங்கள் பல. இவை படிக்கவும் நடிக்கவும் ஏற்ற இனிய நாடகங்களாகத் திகழ்கின்றன. நாடகத் தமிழன்னைக்குத் தாம் சூடிய மணியாரங்களுள் தலைசிறந்ததாகக் கலைஞர் கருதுவது 'சிலப்பதிகார நாடகக் காப்பியம்’ ஆகும். சிலப்பதிகாரத் தேன் சுனையில் தீராத ஆசையுடன் அடிக்கடி மூழ்கித் திளைத்திடும் எனக்கு, அந்தக் கதைக்கே நாடகக்காப்பியம் தந்தால் என்ன என்று தோன்றி யது. அந்த எண்ணத்தின் விளைவாக எழுந்ததே என் னுடைய 'சிலப்பதிகார நாடகக் காப்பிய நூல்" என்று கலைஞர் இந்நாடகம் தோன்றிய காரணத்தைக் குறிப்பிடு கிரு.ர். இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது வெளியான இந்நாடகம் எல்லோருடைய பாராட்டு தலையும் பெற்றது. "தமிழில் உள்ள காப்பியங்களும் செய் யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ருல், உருவத்திலேயும், நாடக வடிவத்திலேயும் கட்டுரை வடிவத்திலேயும் பல நூல்கள் . நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த வகையில் தம்பி கருணநிதி சிலப்பதிகாரத்தை நாடக உருவில் தந்திருக்கிருர். தமிழ் கற்ற அனைவரும் இதனைப் பாராட்டுவார்கள். தம்பி கருணநிதியின் சிறந்த தமிழ் 184