பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடை அனைவரும் உணர்ந்தது. அவரது நடையில் இலக்கிய அறிவும், கலைத் திறனும் இருக்கும். அவர் இந்த நாடகக் காப்பியத்தை எழுதுவதுதற்கு முற்றிலும் பொருத்த மானவர்” என்ற அறிஞர் அண்ணுவின் பாராட்டுரை கலைஞரின் நாடகத் திறனுக்குத் தக்க சான்று. கலைஞரின் தமிழ்நடை தமிழுக்குக் கிடைத்த புதிய தொரு நடை. அவருடைய நடைக்குக் கருணநிதி நடை’’ என்றே தனிப்பெயர் உண்டு. கலைஞரின் நடையில் இலக்கிய அறிவும் கலைத்திறனும் இருக்கும்’ என்று அறிஞர் அண்ணுவே பாராட்டியுள்ளார். 'சிலப்பதிகார நாடகக் காப்பியத்தில் பாண்டியன் அவைக்களத்தில் வழக்குரைக்கும் கண்ணகி தன்னுடைய காற்சிலம்பை மாணிக்கப் பரல்கள் சிதற ஆவேசமாக உடைத்து விட்டுப் பாண்டியனைச் சாடுகிருள். என்ன சொல்லுகிருய், பாண்டியா இப் போது? ... அமைச்சர்களே! ... அறங்கூறும் சான்ருேர்களே!...இதற்கென்ன பதில்?...தலை தொங்கி விட்டதா? நீதி கவிழ்ந்து விட்டதா? வாய் அடைத்து விட்டதா? கெடுஞ்செழியப் பாண்டியனின் அறம்...மறம்...திறன் அத்தனை யும் மண்னேடு மண்ணுகக் கலந்து விட்டதா? அய்யோ, ஏனிந்த வாட்டம்? தமிழகம் சிரிக் கிறது பாண்டியா, நீ தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து!...தமிழ் நாட்டு மறை நூல் திருக் குறள் கேலிபுரிகிறது பாண்டியா, உன் நீதி வளைந்த செய்தி கேட்டு ஆனை, சேனை, ஆயிர மாயிரம் எதிர்த்து வந்தாலும் அண்ணுந்த தலை குனியாமல் படை கடத்தும் உன் வீரமெங்கே? ...எல்லாம் பாழ்!...பாழ்!...பாழ்! மானமெல்லாம் போன பின்பு உனக்கு மாடமாளிகை, மணி மண்டபம் ஒருகேடா? மாணிக்கமிழைத்த 185