பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியாசனம் ஒருகேடா?... மாசு படரவும் நிலம் இகழவும் நீதி வழங்கிய உனக்குச் செங்கோல் எதற்காக? வெண்குடை எதற்காக? வேட்படை, வாட்படை, வேழப்படை எதற்காக? வினனே! வீரர் குலத்துக்கு இழிவு கற்பிக்க வந்தவனே!... இபமிழ்கடல் வேலித் தமிழகமெங்கும் கிங்காமல் நிறைந்திருந்த நீதிதனை கொடிப் பொழுதில் அழித்துவிட்ட பாதகனே! அழு'... அழு!... கன்ாக அழு! என்னைக் காலமெல்லாம் அழ வைத்த காவலனே! கன் ருக அழு!... எந்தன் காதலனைக் - கண்ணுள&னக் - கண் கிறைந்த மணவாளனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று விட்ட பாவி, அழு!...அழு!...அழு!...” இப்பகுதி கலைஞரின் அழகுத் தமிழ் நடைக்கு அருமையான எடுத்துக் காட்டு. பேரறிஞர் அண்ணு அவர்களைப் போன்று கலைஞரும் நாடகத்தினை நல்லதொரு பிரச்சாரக் கருவியாகக் கொண்டு தமது கருத்துக்களே, கன்னித் தமிழ் நாடெங்கணும் பரப்பி வந்தமை நாடறிந்த உண்மை ஆகும். கலைஞர் அவர்கள் பிறருக்காக நல்ல நல்ல நாடகங்களை எழுதித் தந்ததோடு நில்லாது, சிலவற்றை எழுதி, அவற்றில் தாமே பங்கேற்கவும் செய்தார். எடுத்துக்காட்டாக சாந்தா அல்லது பழனி யப்பன், துளக்கு மேடை, பரப்பிரம்மம், உதய சூரியன், காகிதப் பூ ஆகியவற்றைக் கூறலாம். இந்நாடகங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவும், தேர்தல் அல்லது கட்சிக்கு வேண்டிய நிதி திரட்டுதற்காகவும் எழுதி நடிக்கப்பட்டனவாகும். மந்திரி குமாரி, அம்மையப்பன், ஒரே முத்தம், மணி மகுடம், வெள்ளிக் கிழமை என்பவை பிறருக்காக எழுதிய நாடகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாகும். குற வஞ்சி என்னும் திரைப்படம் ஒரே முத்தம் என்ற நாடகத் 186