பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கின்றன; மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் மக்கள் நன்முகத் தெரிந்து கொண்டால்தான் சிறந்த குடி மக்களாக விளங்கி அன்ருடக் கடமைகளைச் சரிவர ஆற்ற முடியும். இவற்றைப் பற்றிய தகவல்களே அறிவதற்கு அவர் கள் நூலகத்தின் துணையையே நாடுவர். அவர்களுக்கு உதவ வேண்டியது இன்று நூலகத்தின் தலையாய கடமைகளில் ஒன்ருகும். சகியான தகவல்களைக் கொடுக்க வேண்டியவர் ஆய்வு உதவு நூலகரே ஆவார். எனவே தனது ஊரிலும், மாநிலத்திலும், நாட்டிலும், உலகத்தின் பல பாகங்களிலும், ஏற்படுகின்ற மாற்றங்களே, சிந்தைகளை, புதுமைகளைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் அவர் சரிவரத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கலைக் களஞ்சியம், அகராதி, நூல் விவரத் தொகுதி, வாழ்க்கை வரலாற்று நூல், நில இயல் மூலம், கையேடு, முதலிய பொது ஆய்வு உதவு நூல்களையும், ஏனைய சிறப்பு ஆய்வு உதவு நூல் களையும் அவர் சேகரித்துத் தன்னருகே வைத்திருக்க வேண்டும். வாசகர்கள் கேட்கின்ற பல பொதுவான, எளிமையான விளுக்களுக்குரிய விடைகளை அவர் சி மம் ஏதுமின்றித் தருவதற்கு இந்நூல்கள் அவருக்குப் பெரிதும் உதவும். அவ்வாறே முக்கிய பருவ வெளியீட்டுத் தொகுதிகளையும் அவர் ஆய்வு உதவுப் பகுதியில் இடம் பெறச்செய்ய வேண்டும். இது தவிர நூலகத்திலிருக்கின்ற பிற நூல்களையும் அவர் சில வேளைகளில் நாட வேண்டியிருக் கும். வாசகர்கள் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதில் ஏதாவது சிரமப்படின் அவர்களுக்கு உற்றுழி உதவ வேண்டி கயதும் அவர்தம் கடமையாகும். நூல்களுக்கிருக்கின்றன செல்வாக்கை, சிறப்டை ஆய்வு உதவு நூலகர், முற்றும் உணர்ந்தவராக இருக்க வேண்டும். நூல்களின் துணையால் மக்களுக்கு மாபெரும் தொண்டுகளை ஆற்றி, இம் மன்பதை வாழ, வளர வழி செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு அவசியம் இருக்கவேண்டும். - அறிவாற்றலோடு விளங்குகின்ற ஒரு ஆய்வு உதவு நூ ல க ர், தல்ல பேசும் திறனும், உருவமும், உடையும் 6