பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழுவல் ஆகும். வெள்ளிக்கிழமை தவிர ஏனையவை திரைப் படமாக்கப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்ததொன்றே.

சாந்தா அல்லது பழனியப்பன் என்பது கலைஞரது முதல் நாடகமாகும். அவர் இளைஞராக இருக்குங்கால் அதனே எழுதினர். அந்நாடகத்தில் வரும் சாம்பசிவம் என்னும் பாத்திரத்தை அவரே ஏற்று நடித்து நண்பர்களது பாராட்டைப் பெற்ருர். அவரது துாக்குமேடை நாடகம் பல சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டு விளங்கியதால் அறிவியக்க நண்பர் பலரது பாரட்டினை அது பெற்றது. சுருங்கக் கூறின் அந்நாடகம் பல சீர்திருத்த நாடகங்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியது. பரப்பிரம்மம் என்னும் அவரது நாடகத்தில் பல சமுதாயப் பிரச்சினைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அடுத்து 1962 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒட்டி அவர் எழுதி நடித்த உதய சூரியன் என்னும் நாடகம் அக்கால அரசால் தடை செய்யப்பட்டது. பொதுத் தேர்தலுக்காக எழுதப் பெற்ற மற்ருெரு நாடகம் அவரது புகழ்வாய்ந்த காகிதப்பூ நாடகம் ஆகும். அந்நாடகம் 1966 ஆம் ஆண்டு அரங்கேறி யது. அந்நாடகம் அளித்த தேர்தல்நிதி பதிைேரு இலட்சம் வெண்பொற் காசுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தேவி நாடக சபையினருக்காக, ஒரே முத்தம், மந்திரி குமாரி ஆகிய நாடகங்களை அவர் உருவாக்கினர். இவரது மந்திரிகுமாரி நாடகத்தை மார்டன் தியேட்டர்ஸ் உரிமை யாளர் டி. ஆர். சுந்தரம் மிகச் சிறந்த முறையில் படமாக்கி வெளியிட்டது நாம் அறிந்த தொன்ருகும்.

சுருங்கக் கூறின் இவரது நாடங்களில், வீரம், காதல், அவலம், நகை முதலிய எல்லாச் சுவைகளும் போட்டி போடுவதை நாம் காணலாம். அத்துடன் அவற்றில் பகுத் தறிவுக் கொள்கைகளையும், தமிழ் மொழி, இலக்கியம் இனம் ஆகியவை பற்றிய பெருமிதமான எண்ணங்களையும் இன்றையச் சமுதாயச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய வழிவகை

187