பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களையும், உரிமை வேட்கை பற்றிய உண்மைக் கருத்துக்களை யும் உணர்ச்சி மிக்க உரையாடல்களையும், கோழையையும் வீரனுக்கும் வீர உரைகளையும், அருந்தமிழின் ஆற்றலையும், கன்னித் தமிழின் கனிச் சுவையினையும் நாம் காணலாம். நாடக உலகில் தனிநாயகனக விளங்கிய கவிஞர் திரை யுலகிலும் ஈடும் இணையும் இல்லாது விளங்கினர். கட்டுக் கோப்பான சிறந்த கதை அமைப்பு கலைஞரின் கைவந்த கலையாகும். அதன் காரணமாக திரைக் கதையில் வரும் பாத்திரங்கள் உயிரோவியங்களாக மாறி விடுகின்றன. நடிகர்கள் எவ்விதச் சிரமமும் இன்றி எளிதில் நடிக்கக்கூடிய வகையில் கதை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அத் துடன் அன்ருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் சம்பவங்களும் கதையில் இடம்பெற்றிருக்கும். சுருங்கக் கூறின், மனித இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டக் கூடிய நிலையில் அவரது கதைகள் அனைத்தும் வனையப் பட்டுள்ளன. இவற் றிற்கெல்லாம் மேலாக அவரது தமிழ் நடை விளங்குகிறது. அவரது திரைக்கதை வசனத்தில் தமிழ் தளர்நடை இடும்; துள்ளி ஒடும்; குதிக்கும்; கூத்தாடும். தமிழ் என்னும் அமிழ் தத்தின் சுவையை நாம் அள்ளிப் பருகலாம். ராஜகுமாரி, அபிமன்யூ, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகள், தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப் பார், நாம், மனுேகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப் பித்தன் எல்லோரும் இந்நாட்டு மன்னர் குறவஞ்சி, அரசிளங்குமரி, தாயில்லாப்பிள்ளை, காஞ்சித் தலைவன், இருவர் உள்ளம், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்க முடியுமா, அவன் பித்தன, வாலிப விருந்து, தங்கத் தம்பி, எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை முதலியன இவர்தம் திரையுலக வெற்றிப் படைப்புக்களாகும். நாடக ஆசிரியராகவும், திரைக் கதையாசிரியராகவும் விளங்குகின்ற நமது கலைஞர் பண்புடைய பத்திரிக்கை 138