பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரும் ஆவார். மாணவராக இவர் இருந்த பொழுது இயக்கக் கருத்துக்கள் அனைத்தையும் முரசொலி என்ற தலைப் புள்ள அறிக்கைகள் மூலமாகப் பரப்பியதை நாடே நன்கறி யும். அம் முரசொலியே வார இதழாக வளர்ந்தது. இன்று நாளிதழாக நாட்டில் நடமாடுகிறது. தமிழ் மக்களது உள்ளங்களில் தமிழ் உணர்வை, உரிமையை, முரசொலியின் வாயிலாகக் கலைஞர் ஊட்டி வருகிருர் என்று கூறின், அது மிகையாகாது. அத்துடன், அவர் குடியரசு, மாலை மணி முத்தாரம் ஆகிய ஏடுகளின் ஆசிரியர் குழுவில் இருந்து அவற்றைச் சிறப்பித்துள்ளார். இங்கு குறிப்பிடத்தக்க மற்ருெரு செய்தி, பொதுநலச் சார்பான படிப்பகங்களுக்கு அவர் தமது நடிப்பின் மூலம் நிதி திரட்டிக் கொடுத்தமை ஆகும். இவற்றிற்கெல்லாம் மேலாக, படக்காட்சித் துறையில் இவர் செய்துள்ள வசனப் புரட்சியினை எவரும் என்றுமே மறக்க முடியாது. அவரது திரைக்கதைகள் வெளிவந்த பொழுதெல்லாம், மக்கள் அக் கதை வசனங்களை நெட்டுருப் போட்டு, இருந்தகாலும், நின்றகாலும், நடந்தகாலும், சொல்லிச் சொல்லி மகிழ்ந் தனர் அன்ருே! பயண இலக்கியம் பயண இலக்கிய வகையிலும் கலைஞர் வல்லமை காட்டி யுள்ளார். இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்த கலைஞர் எழுதிய 'இனியவை இருபது” என்னும் நூல் தமிழுக்குக் இடைத்த அரியதோர் பயண இலக்கியமாகும். பயண இலக்கியம் எனில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக 'இனியவை இருபது இலங்குகின்றது. சென்றேன், கண்டேன், வந்தேன்' என்ற முறையில் இந் நூலைக் கலைஞர் எழுதவில்லை. சென்ற நாட்டின் வர லாற்றை, மக்களின் பண்பாட்டை ஆராய்ச்சிக் கண்ளுேடு நோக்கி இனிய தமிழில் வடித்துத் தந்திருக்கிருர். இதைப் 189