பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் பொழுது, இதில் குறிப்பிட்டுள்ள நாடுகளுக் கெல்லாம், நாமே நேரில் சென்று வந்த உணர்வைப் பெறு கின்ருேம். அதுமட்டுமன்று. இத்தாலி நாட்டுப் பயண அனுபவத்தை விளக்குங்கால், உரோமப் பேரரசில் சீசரின் எழுச்சி, அகஸ்டசின் ஆட்சி, அந்தோணியின் மயக்கம், கிளியோபாத்ராவின் சாகசம், காலிசுலாவின் அட்டகாசம், நீரோவின் வெறியாட்டம், அக்ரிப்பாளுவின் ஆபாசங்கள், அரிலியசின் அருள்தெறி, ஏஞ்சலோவின் கலைத்திறன் என்று வேறுபட்ட உணர்வுகளைக் கொண்ட மகத்தான மனிதர்களின் வாழ்க்கைத் தொகுப்பாக விளங்கும் உரோமாபுரியின் வர லாற்றை நம் நினைவுக்குக் கொண்டு வருகிருர். அவ்வாறே மேற்கு ஜெர்மனி, ஆலந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறி, ஐரோப்பிய நாடுகளின் வரலாற்று வீதியில் உலாவந்த உணர்வை உண்டாக்குகின்ருர் கலைஞர். அரசியல் தலைவர் என்ற முறையில் கலைஞர் சட்டமன்றத் திலும், மாநாடுகளிலும் ஆற்றிய சொற்பொழிவுகளும், அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் நூல் களாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்கள் கலைஞரின் அரசியல் தெளிவுக்கும், அறிவுக்கும், துணிவுக்கும், விவேகத்திற்கும் சான்ருவன. க. லை ஞ ரி ன் அரசியல் கட்டுரைகள் சிலவும், சிறுகதைகளும், சிலப்பதிகார நாடகக் காப்பியமும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளன. அன்னைத் தமிழுக்கு அணியாய் அமைந்த கலைஞரின் அரிய நூல்களின் பட்டி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. 190