பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு விளங்கின், அவர் வாசகர்களது மனதிலே என்றும் நீங்காது இடம் பெற்றிருப்பார். இவற்றிற்கெல்லாம் மேலாக அ வ ர் பண்புடையவராகவும் ஒழுக்கமுடையவராகவும் உயர்ந்து விளங்க வேண்டும். மாருக அவர் நல்லியல்பு இல்லா தவராக விளங்கின் அவர் பெற்றிருக்கின்ற அறிவாற்றலால் பயன் ஒன்றுமில்லை. இதனைப் பின்வரும் குறள் வெண்பா நன்கு வலியுறுத்தும். - "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று”. அதாவது, பண்பில்லாதவன் அடைந்துள்ள பெருஞ் செல்வ மானது, நல்ல ஆவின்பால் அது வைக்கப்பட்டுள்ள கலத்தின் குற்றத்தால் திரிந்து பட்டது போல் இழிந்து கெடும். அது போல் அறிவாற்றல் நிரம்பிய ஆய்வு உதவு நூலகர் பண்பு நலன் பெற்றவராக இல்லை எனில் அவர் தமது பணியில் சிறந்து விளங்க முடியாது. ஆய்வு உதவு நூலகர் ஆற்ற வேண்டிய பணிகள் பின் வருவன ஆய்வு உதவு நூலகர் ஆற்ற வேண்டிய அரும் பெரும் பணிகளாகும்: 1. ஆய்வு உதவுப் பணிபற்றிய கொள்கைகளை வகுத்தல்: நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களுக்கு, அவர்களது அறிவு நிலையின் அடிப்படையில் எத்தகைய ஆய்வு உதவுப் பணியினை ஆற்றுவது, அதனை எந்த அளவிற்கு ஆற்றுவது, எவ்வாறு ஆற்றுவது, அப்பணியினைச் சிறந்த முறையில் ஆற்றுவதற்கு நாம் வகுக்க வேண்டிய விதிமுறைகள் யாவை என்பன பற்றி நூலகர் நூாகை ஆட்சியாளரைக் கலந்து அவை பற்றி திட்ட வட்டமான கொள்கைகளை வகுத்தல். 7