பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகியவற்றின் சிறப்பு, பயன் ஆகியவற்றையும் கேட்பர். இதுதவிர ஒரு பொருளைப்பற்றிய பல நூல்களின் தரம் பற்றி யும் கேட்பர். அத்துடன் தங்களுடைய அறிவு நிலைகளுக் கேற்ப, படிப்பதற்குரிய நூல்களைப் பற்றிச் சொல்லும்படியும் கேட்பர். இவ்வாறெல்லாம் வாசகர்கள் கேட்பின், ஆய்வு உதவு நூலகர், நூலக நூற்பட்டி, நூல் வெளியீட்டாளர், நூல் விற்பனையாளர் ஆகியோர் வெளியிட்ட நூற்பட்டிகள், நூல் விவரத்தொகுதிகள், பருவவெளியீட்டு அகர வ ரி ைச க் தொகுப்பு அட்டவணைகள் ஆகியவற்றைக் கலந்து அவ்விவ ரங்களைத் தந்து உதவவேண்டும். இவ்வாறே, வாசிப்பு நூல் பட்டிகள் தயாரிக்கின்ற பொழுதும், பிற நூலகங்களிலிருந்து ஒரு நூலகம் ஆனது வாசகர்களுக்கு நூல்களேக் கடன் வாங்க எண்ணும்போதும், ஆய்வு உதவு நூலகர் நூல்களைப் பற்றிய விவரங்களைத் தேடிக் குறித்துத் தருதல் வேண்டும். 6. உடன் ஆய்வு உதவுப்பணி: வாசகர்கள் வந்து கேட்கின்ற செய்திகள், அவைபற்றிய விளக்கங்கள், அவர்கள் எழுப்புகின்ற எளிய வின க்களுக்குரிய விடைகள் ஆகியவற்றைத் தருதல். சுருங்கக் கூறின், நூலகத் திற்கு வருகின்றவர்களுக்கு த் தேவைப்படுகின்ற எல்லாத் தக வல்களையும் சேகரித்து அளித்தல். 7. நூலகக் கருவூல உத வி: சிலவேளைகளில் நூலகக் கருவூலத்தில்ே வாசகர்கள் விரும்பு கின்ற நூல்களைத் தேடுவதிலும், தேர்ந்தெடுப்பதிலும் அவர் களுக்கு ஆய்வு உதவு நூலகர் உதவ வேண்டியிருக்கும். அத் துடன் வாசகர் விரும்புகின்ற ஒரு குறிப்பிட்ட நூல் இல்லை யெனில், அதற்குப் பதி லாக ஒரு தகுந்த நூலே ஆய்வு உதவு நூலகர் எடுத்துக் கொடுக்க வேண்டும். இப்பணியினைச் செம்மையுறச் செய்யவேண்டுமெனின், ஆய்வு உதவு நூலகர் 9