பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகக் சருவூலத்திலுள்ள நூல்களைப் பற்றிய விவரங்களே எல்லாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். - 8. வாசிப்பு உதவி: நூலகத்திற்குத் தொடர்ந்து வருகின்ற வாசகர்களது விருப்பம், தேவை, அறிவுநிலை ஆகியவற்றை அறித்து, அவற்றிற்கேற்ப அவர்களுக்குரிய நூல்களை ஆய்வு உதவு நூலகர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். சில வாசகர்கள் தங்களுடைய அறிவின் வளர்த்துக் கொள்வதற்காக வேண்டி படிப்படியாக, அதாவது முறையாக நூல்களைப் படிக்க விரும்பலாம். அதற்கேற்ற வண்ணம் அவர்களுக்கு நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியது ஆய்வு உதவு நூல கரது பொறுப்பாகும். வாசகர்களது வயதிற்கேற்பவும் நூல் சளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். இப்பணியினை தன்கு ஆற்றுவதற்கும் ஆய்வு உதவு நூலகருக்கு நூல்களேப்பற்றிய தெளிந்த அறிவு இருக்க வேண்டும். - 1. 9. தொடர்கிலை ஆய்வு உதவுப்பணி: ஆராய்ச்சியாளர்களுக்குச் செய்யப்படுகின்ற ஒருசிறப்புப் பணியே தொடர்நிலை ஆய்வு உதவுப் பணியாகு ம். ஆராய்ச்சி யாளரால் விரும்பப் படுகின்ற செய்திகள், புள்ளி விவரங்கள் முதலியன நூல்களிலோ, அன்றி ஆய்வு உதவு நூல் தொகுதி களிலோ, அன்றி பருவ வெளியீட்டுக் கட்டுரைகளிலோ, அன்றி வேறு மூலங்களிலோ காணப்படலாம். எனவே ஆய்வு உதவு நூலகர் தொடர்ந்து இப்பணியினைச் செய்தால் தான் ஆராய்ச்சியாளருக்கு ஏற்ற வகையில் உதவ இயலும். அதாவது இத்தகைய பணியினை முடிப்பதற்கு, பலமணி நேரமோ, அன்றி, பல நாட்களோ, ஒருசில வேளைகளில் மாதங்களோ ஆய்வு உதவு நூலகர் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதிருக்கும். பல நூல்கள், பல ஆய்வு உதவு நூல்கள் 1 Ո