பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடிகள், அறிக்கைகள், துண்டுவெளியீடுகள், பருவ வெளி யீட்டுக் கட்டுரைகள் முதலியவற்றை அவர் தேடி எடுத்து, படித்து, அதன் பின்னர் ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டிய செய்திகளையும், குறிப்புக்களையும், புள்ளிவிவரங்களையும் திரட்டித்தர இயலும். 10. வாசிப்பு நூல்-கட்டுரைப்பட்டி தயாரித்தல்: வாசிப்புநூல்-கட்டுரைப்பட்டிகளைத் தயாரித்து, அதனது பல படிகளை எடுத்து, அவற்றினை அவ்வப்பொழுது வேண்டி யவர்களுக்கு வழங்குதல். 11. நூல் விவரத் தொகுதிகளைத் தொகுத்து வாசகர் களுக்கு வழங்குதல்: அவற்றைப் பொருள் வாரியாகத் தொகுப்பின் அவை ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயன்படும்.போதுமான அளவு பொருள்வசதி இருப்பின் அவற்றை அச்சிட்டு வழங்கலாம். ஒரு நூலுக்குத் தயாரிக்கப்படும் பதிவு, நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூலின் பதிப்பு, நூலின் வெளியீட்டாளர், நூல் வெளி யிடப்பட்ட இடம், ஆண்டு, நூலின்விலை, நூலின் அளவு, பக்த எண்ணிக்கை, நூற்ப்ொருட் குறிப்பு ஆகிய விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும். 12. பருவ வெளியீட்டுக் கட்டுரை விவரத் தொகுதிகளைத் தொகுத்து வழங்குதல்: a நூல்விவரத் தொகுதிகளைத் தொகுத்து வழங்கு தல்ப்ோல இவற்றையும் தொகுத்து வழங்கலாம். பருவ வெளியீட்டுக் கட்டுரை விவரத் தொகுதியில் காணும் பதிவில், கட்டுரையாளரின் பெயர், கட்டுரையின் உலேப்பு, பருவ வெளியீட்டின் பெயர், அதன் பிரிவுத் தொகுதி எண், பிரிவுத் தொகுதி வெளியிடப்பட்ட மாதம், ஆண்டு, கட்டுரையின் இடம்(பக்கங்கள்),கட்டுரைப் பொருட்குறிப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். 13. கோப்புகள் தொகுத்து வைத்தல்: செய்திக் கோப்புகள், ஆய்வு உதவுப்பணி விவரக்கோப்பு கள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து வைத்தல், 1 1