பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வகுப்பு நடத்தல்: * o கல்வி நிறுவன நூலகங்களில் ஆய்வு உதவு நூலகர், சில வகுப்புக்களை, நடத்தி பொதுவாக நூலகம், நூலகத்தில் காணும் செல்வங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவதோடு, சிறப்பாக ஆய்வு உதவு நூல்தொகுதிகளின் இயல்பு, வகை, பயன். பயன்படுத்தும் முறை ஆகியவற்றையும் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு செய்யின், மாணவர்கள் தாங்களாகவே அந்நூல்களை எடுக் தாளக் கூடிய திறமையினைப் பெறுவர். 15. குழு நிகழ்ச்சிகள்: -- * பொது நூலகங்கள், சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்தரங்குகள், நூல்திறய்ைவுக் கூட்டங்கள், படக் காட்சிகள், முதலிய குழு நிகழ்ச்சிகளுக்கு ஏ ற் பா டு செய்யலாம். படக்காட்சிகள், கல்வி, நூல்கள், நூலகங்கள் சம்பந்தப் பட்டவையாக இருக்க வேண்டும். நூலகத்திற்கு வருகின்ற புதிய நூல்கள், நூலகத்தில் காணுகின்ற அரிய நூல்கள் ஆகியன பற்றி நூல் திறய்ைவுகள் நடத்தவேண்டும். குழந்தை நூல்கள் பற்றிய சொற்பொழிவுகளுக்கும் பொது நூலகங்கள் ஏற்பாடு செய்யலாம். இந்நிகழ்ச்சிகளை எல்லாம் அமைக்க வேண்டியது ஆய்வு உதவு நூ கரின் கடமைகளில் ஒன்ருகும். 16. படி எடுப்புப் பணி: ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் அல்லது வாசகர்கள். அவர்களுக்கு வேண்டிய முக்கியமான தகவல்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்ற நூலின் பக்கங்களின் மறு படியினை விரும்பலாம். அ. து க ல் அப்பக்கங்களின் மறு படியி&ன ஆய்வு உதவு நூலகர் எடுத்துத் தந்து உதவ வேண்டும். அதற்குரிய கருவிகளை நூலகம் கொண்டிருக்க வேண்டும். ஆய்வு உதவு நூல்கள் ஆய்வு உதவு நூலகர் தமது பணியினைத் திறம்படச் செய் வ ற்குப் பெரிதும் துணைபுரிவன ஆய்வு உதவு நூல்கள் ஆகும். ஆய்வு உதவு நூல்கள் பொது ஆய்வு உதவு நூல்கள், சிறப்பு ஆய்வு உதவு நூல்கள் என்று இருவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளமையினே நாம் அறிவோம். டொது ஆய்வு உதவு நூல்களில் முக்கியமானவை கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், 12