பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H H வாழ்க்கை வரலாற்று மூலங்கள், நூல்விவரத் தொகுதிகள், நிலஇயல் செய்தி மூலங்கள் என்பனவாகும். அவற்றுள் கலைக் களஞ்சியங்கள் என்பவை எல்லாப் பொருள்களைப் பற்றியும் சுருக்கமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும். என்சை கிலோ பீடியா பிரிட்டானிக்கா’, ‘என்சைகிலோ பீ டி யா அமெரிக்கான', 'கொலப் பியா என்சைகிலோ பீ டி யா’, 'தமிழ்க்கலைக் களஞ்சியம்'என்பன குறிப்பிடத் தக்ககலைக்களஞ் சியங்களாகும். சொற்களைப் பற்றிய் கேள்விகளுக்குரிய பதில் களைத் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துண்ை செய்வன ஆகராதிகளும், சொற்களைப் பற்றிய பிறநூல்களும் ஆகும். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகளான இங்கிலிஷ்தமிழ் டிக்ஷனரி', 'தமிழ் லெக்சிகன்’, ‘ஆக்ஸ் போர்டு இங்கிலிஷ் டிக்ஷனரி', சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட கலைச்சொற்கள்” ஆகியன சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். நாட்டுத்தலைவர்கள், கலைஞர்கள்,அறிஞர்கள், விஞ்ஞானிகள், முதலியவர்களது வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட செய்திகளைத் தெரிந்து கொள்வதற்குத் துணை புரிவன வாழ்க்கை வரலாற்று மூலங்களாகும். ' தமிழ் எழுத்தாளர் யார்-எவர்?’ (திமிழ் எழுத்தாளர் சங்கம் சென்னை) ஹ9 இஸ் ஹ9 (உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்), 'டிக்ஷனரி ஆப் அமெரிக்சன் பயாகிரபி’ முதலியன குறிப் பிடத்தக்க வாழ்க்கை வரலாற்று மூலங்கள்ாகும். நூல்விவரத் தொகுதிகள் என்பன நூல்களைப் பற்றிய எல்லா விவரங்களை யும்- ஆசிரியர், தலைப்பு, பதிப்பு, நூலியற்று உதவியாளர், வெளியீட்டாளர், வ்ெளியிடப்பட்ட இடம், வெளியான ஆண்டு, விலை, நூலின் அளவு, பக்க எண்ணிக்கை, பொருட் குறிப்பு-தருவனவாகும். “இந்தியன் நேஷனல் பிப்ளியாகிரபி’’ 'பிரிட்டிஷ் நேஷனல் பிப்ளியாகிரபி’, 'தமிழ் நூல் வேர விவரத் தொகுதிகளாகும். நிலஇயல் செய்தி மூ லங்க ள் என்பன, நிலப்பட ஏடுகள், நிலஇயல் அகராதிகள், நாட்டுப் படங்கள், நிலப்படங்கள் முதலியனவாகும். 'கூ ட் ஸ் வொர்ல்டு அட்லஸ்', 'வெப்ஸ்டர்ஸ் ஜியோகிரபிகல் டிக்ஷ்னரி' என்பன இங்கு குறிக்கத்தக்கனவாகும். 13.