பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு ஆய்வு உதவு நூல்கள் என்பன அறிவுப் பொருள்கள் பற்றியனவாகும். கலைக்களஞ்சியங்கள், அக ராதிகள் வடிவத்தில் வெளியிடப் பெற்றிருக்கும் அறிவுப் பொருள்கள்பற்றிய நூல்கள், அவ்வாறே அறிவுப்பொருள்கள் பற்றிய நூல் விவரத் தொகுதிகள், பருவ வெளியீட்டு இதழ்க் கட்டுரை விவரத் தொகுதிகள் ஆகியன இவ்வகையைச் சார்ந்தனவாகும். மேலும் ஒருசில அகர வரிசைத் தொகுப்பு அட்டவணைகளும் இதன் பாற்படும். பொது ஆய்வு உதவு நூல்கள், சிறப்பு ஆய்வு உதவு நூல்கள் ஆகியவற்றிடையே காணப்படுகின்ற ஒரு முக்கிய வேற்றுமை, ஒருவன் தான் வேண்டிய செய்தியினை ஒரு பொது ஆய்வு உதவு நூலில் காண முடியும் என்பதும், ஆனால் அவன் விரும்புகின்ற தகவலை அல்லது செய்தியினை எங்கு தெரிந்து கொள்ளலாம், அதாவது எந்த நூலிலே காணலாம் எ ன் ப த ற் கு வழி காட்டுவதே சிறப்பு ஆய்வு உதவு நூலின் தன்மை என்பதும் ஆகும். சிறப்பு ஆய்வு உதவு நூல்கள் அறிஞர் களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், கட்டுரையாளர்களுக்கும், சிறந்த வழிகாட்டிகளாக விளங்கு கின்றன. ஆராய்ச்சியாளர்களுக்கு இ ைவ ஊன்றுகோல் க ள கு ம். இவ்வூன்றுகோல்களின் துணைகொண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சிப் பாதையில் ஏறு நடை போட்டு முன்னேறி பீடும் பெருமையும் பெறுகின்றனர். இத்தகைய சிறப்பு ஆய்வு உதவு நூல்கள் பலவற்றைப் படைக்க வேண்டியது நம்நாட்டு அறிஞர்களது கடமையாகும். இந்திய மொழிகள் அனைத்திலும் பல சிறப்பு ஆய்வு நூல்கள் வெளிவருமெனின் அது நமது நாட்டிற்குப் பெருமை தரக்கூடியதாகும். அந்நூல்கள் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். அகளுல் ஆராய்ச்சி அறிவு நம்மவர் களுக்கு மிகு மன்ருே எல்லாத்துறைகளிலும் புதியனவற்றைக் கண்டுபிடிக்க முடியுமன்ருே! அதன் காரணமாக உலகம் நம்மை உவந்து போற்றுமல்லவா? 1 4.