பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுவரை கூறியவற்ருல், நூலகத்தின் தலையாய பணிகளில் ஆய்வு உதவுப் பணியும் ஒன்ருகும் என்பதும், அவ்ஆய்வு உதவுப்பணியினச் செய்கின்ற ஆய்வு உதவு நூ ல கர், அறிவாற்றல் உடையவராகவும், பண்புடைய ராகவும், பணிசெய்கின்ற ஆர்வமுடையவராகவும், பொறுமை யுடையவராகவும், மக்களை தேசிக்கின்ற இயல்புடைய வராகவும், அடக்கமுடையவராகவும், கற்பனை வளம், நினை வாற்றல், சொற்றிறன், ஆகியவற்றைக் கொண்டவராகவும், நூல் உலகத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்த வராகவும், பிறரது தேவைகளை உடனடியாகப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும், தான் ஆற்றுகின்ற அருந் தொண்டினல், தான் பணியாற்றுகின்ற நிறுவனத்திற்குப் பேரும் புகழும் கிடைக்கச் செய்கின்றவராகவும், விளங்க வேண்டும் என்பதும், அத்துடன் அவர் தனது பணிகளைக் கடமை உணர்வோடு ஆற்றின், மக்கள் அனைவரும் அவரது தொண்டின் சிறப்பைப் போற்றிப் புகழ, அவரது நிலை உயரும் என்பதும், மேலும் எழில், கீர்த்தி, பொருள், மனநிறைவு, பதவி உயர்வு ஆகியன தாமே அவரை வந்தடையம் என்பதும் இனிது பெறப்படும். = ஆய்வு உதவுப் பணியின் இன்றியமையாமையினை, சிறப்பினே, ஆற்றலை நாம் முழுதும் உணராமலிருப்பது மிகவும் வருந்துதற்குரிய தாகும். ஒரு சில மேலைநாடுகள் உலகம் வியந்து போற்றும் வண்ணம் பலதுறைகளில் உயர்ந்து விளங்குவதற்குரிய காரணம், அந்நாட்டு மக்கள் நூலகங்கள் ஆற்றுகின்ற ஆய்வு உதவுப் பணியின் அருமை பெருமையினை உணர்ந்து அதனை நல்லமுறையில் பயன்படுத்துவதே ஆகும். தண்மை வாய்ந்த உலகநாடுகள் உலகப் போர்களில் வெற்றி பெற்றமைக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று, அந்நாட்டு நூலகங்கள் போர்க்காலங்களில் ஆற்றிய அரிய தகவற் பணியாகும். அந்நாடுகள், பொருளாதாரத் துறை, அறிவியல் அறை ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக விளங்குவன அந்நாட்டு நூலகங்களே என்று கூறினல் அது மிகையாகாது. அந்நூலகங்கள் ஆற்றுகின்ற 15