பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிய பணியாகிய ஆய்வு உதவுப் பணியின் அருமையினை, பெருமையினே, ஆற்றலினை அந்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து போற்றத் தலப்பட்டுள்ளனர். அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், அறிவியல் விற்பன்னர்களும், ஆய்வாளர்களும், அப்பணியினைத் தாங்கள் பெற்ற பெரும் பே ருகக்கருதி, அதனே கன்கு பயன்படுத்தி, பல ஆய்வு களை நடத்தி, புதிய உண்மை களைக் கண்டுபிடித்து, அவற்றை நாட்டின் வளர்ச்சிக்காக நன்கு பயன் படுத்துகின்றனர். எனவே தான் அந்நாடுகள் அறிவுவாமும், தொழில் வளமும், பொருள்வளமும் பெற்று விளங்குகின்றன. அந்நாட்டு மக்கள் அறிவுடையவர்களாக, ஆற்றல் உடையவர்களாக, விளங்குவதோடு, உலகமக்கள் வியந்து போற்றும் வண்ணம் அறிவியல் துறையில் பல கண்டு பிடிப்புக்களைக் கண்டு பிடிக்கின்றனர். அத்துடன் பிறதுறை களிலும் பல புதுமைகள் ஏற்படுவதற்கு அவர்கள் காரணமாக விளங்குகின்ருர்கள். அதன் காரணமாக அவர்கள் தங்கள் நாடுகளுக்குப் பெருமையும் . புகழும் தேடித் தருகின்றனர். அந்நாடுகள் உலகஅ சங்கில் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. ஆனல் நமது நாட்டு மக்களில் பெரும்பாலே ர் நூலகத் தினுடைய இன்றியமையாமையினை, நூலகப்பண்ணியினுடைய சிறப்பினே, ஆய்வு உதவுப்பணி பின் ஆற்றலினை அறியாமல் இருப்பது வருந்துதற்குரியதாகும். நாமும் நூலகத்தின், நூலகம் ஆற்றுகின்ற பல பணிகளின், சிறப்பாக ஆய்வு உதவு பணியின் மேன்மையினை உணர்ந்து, அவற்றை நன்கு பயன் படுத்தி மேலைநாட்டினரைப் போன்று உண்மையாகப் பாடு படுவோமெனில், ஒரு நாள் நமது பாரத மணித்திரு நாடு, சிறப்பாக அன்னைத் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் தை சிறந்து விளங்கி, உலகிற்கு வழிகாட்டும் என்று நாம் உறுதியாகக் கூறலாம். Yêr ★ 责 1 6