பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ஒ o 2. "ஆராய்ச்சியாளர்க்குப் பாரதி” 'இசை பாடுவோம் பாம்; கற்பனையால் கனவு காண்டோம் யாம்: தனிமையில் கடற்கரையில் சுற்றித் திரிந்தும் எங்கோ உள்ள ஒடையின் கரையிலமர்ந்தும், உலகத்தை அறவே மறப்போம்; உலக சிந்தனை யற்றிருப்போம்; எனினும், நிலவின் ஒளியிலே கவி பாடுவோம்; உலகத்தை ஆட்டி யசைத்து இயங்க வைப்போம்’ என்று ஆர்தர் வில்லியம் எட்கார் ஒ. ச.தெசி என்பவர் கவிஞர்களின் ஆற்றலைக் குறித்து அ மையாகப் பாடி யுள்ளார். இதற்குச் சிறந்த இலக்கியமாக இலங்கும் இன்தமிழ்க் கவிஞர் பாட்டுக்கொரு புலவராகிய பாரதியே ஆவார். ஆங்கிலேய ஆட்சிக்கு அ ைஅப்பட்டுக் கிடந்த தமது அருமைத் தாய்நாட்டை விடுவிக்க வீறுகொண்டெழுந் தார். 'எல்லோரும் இந்நாட்டு மன்னராவார்’ என்று கனவு கண்டார். இக்கனவினே நனவாக்க நாட்டு மக்களே இசை பாடி ஏற்றமும் எழிலும் பெறச் செய்த சர். பைந்தமிழ்ப் பாக்கள் பாடி, பாமரமக்களைத் தட்டி எ ஒப்பி, உணர்வும் உரமும் பெறச் செய்து, உரிமை வேட்கையுடன், மொழிப் பற்றையும் ஊட்டி, தலே நிமிரச் செய்தார். உள்ளத்திலே, ஊக்கமின்றி, குருடர்களாய் ஊமையராய் வாழ்ந்த நாம் அவர் பாக்களேச் செவிமடுத்த பின்னர், அஞ்சி ஒடுங்காது, அடலேறு போல் விளங்கி, அண்ணல் காத்தி காட்டிய பாை தி முலே சென்று, ஆங்கிலேயருடன் அறப்போர் தொடுத்து, அவனி வியக்கும் வகையில் நமது அடிமை விலங்கொடித் தோம். நமது நாட்டை தாமே ஆகும் உரிமையைப் பெற் ருேம். அதாவது, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் கனவு நனவாகியது. 2-سg۔